அட ! சப்பாத்தியை இவ்ளோ ஹெல்தியா, ஈஸியா செய்ய முடியும்னா, இனி தினமுமே சப்பாத்தி செய்யலாம். இதுல அப்படி என்னங்க விசேஷம் நினைக்கிறீர்களா? வாங்க என்னன்னு பார்க்கலாம்.

chappathi
- Advertisement -

எல்லா வயதினருக்கும் ஏற்ற நல்ல டயட் உணவு என்றால் அது சப்பாத்தி தான். கோதுமை மாவில் இருக்கக் கூடிய பைபர் உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சத்து நிறைந்த இந்த கோதுமை மாவுடன் சர்க்கரை வள்ளி கிழங்கையும் சேர்த்து ஒரு அருமையான சப்பாத்தியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சக்கர வள்ளி கிழங்கில் விட்டமின் ஏ பி சி போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதுடன் இரும்புச் சத்து, பொட்டாசியம், நார்ச் சத்து, போன்ற எண்ணற்ற சத்துக்கள் கிழங்கில் உண்டு. பெரும்பாலும் கிழங்கு வகைகள் அதிகம் உண்பதை தவிர்த்து விடுகிறோம். இதற்கு காரணம் கிழங்கு வகைகளை உண்பதால் உடல் எடை கூடும் என்று தான். சக்கரவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிடும் போது உடல் எடை கூடும் என்ற பயம் கொள்ளத் தேவையில்லை. இவ்வளவு சத்து நிறைந்த ஆரோக்கியமான இந்த சக்கரவள்ளி கிழங்கை வைத்து இந்த சப்பாத்தி எப்படி செய்வது என்று நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

- Advertisement -

செய்முறை

இந்த சப்பாத்தி செய்வதற்கு முதலில் 1/4 கிலோ சக்கரை வள்ளி கிழங்கை சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே தோலை உரித்து ஒரு மேசர் வைத்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். மசித்த உடன் இந்த கிழங்கிற்கு 1/2 கப் கோதுமை மாவு, 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் ஓமம், சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கிழங்கில் இருக்கும் ஈரப்பதத்திலே அதை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை மிகவும் தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக பிசைந்து, அதன் மேலே லேசாக எண்ணெய் தடவி அரை மணி நேரம் இந்த மாவை அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து மாவை உங்களுக்கு தேவையான அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, எப்போதும் போல சப்பாத்தி கட்டையில் தேய்த்த பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன், ஒவ்வொரு சப்பாத்தியாக திரட்டி போட்டு எண்ணெய் அல்லது நெய் உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்த்து சப்பாத்தியை சுட்டு எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கீரை வடைய இப்படி செஞ்சி பாருங்க, ஹோட்டல் ஸ்டைல்ல நல்ல மொறு மொறுன்னு கிறிஸ்பியா சாப்பிட செமையா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இந்த ஆரோக்கியமான சத்து மிகுந்த சக்கரை வள்ளி கிழங்கு சப்பாத்தியை வாரம் ஒரு முறையாவது சமைத்து வீட்டில் உள்ளவர்கள் கொடுங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே சாப்பிடக் கூடிய நல்ல ஒரு ஹெல்தியான உணவு. இந்த சப்பாத்தி ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -