குக்குல பெரிய மக்கா இருக்கிறவங்க கூட, இந்த மரவள்ளிக்கிழங்கு கட்லெட்டை 15 நிமிஷத்துல செஞ்சு அசத்தலாம்.

cutlet
- Advertisement -

சில பேருக்கு சமையல் அவ்வளவு சுலபமாக வராது. ருசியாக சமைக்க தெரியாது. அப்படிப்பட்டவர்கள் கூட வேகவைத்த மரவள்ளிக்கிழங்கை வைத்து சூப்பராக ஆரோக்கியம் தரும் இந்த கட்லெட் ரெசிபியை செய்துவிடலாம். மரவள்ளிக்கிழங்கு வாங்கினால் கட்டாயம் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு கொடுங்க. மரவள்ளிக்கிழங்கு சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த கட்டிலட்டை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இன்ட்ரஸ்டிங்கான புதுமையான ரெசிபியை நாமும் படித்து தெரிந்து கொள்வோமா.

செய்முறை

முதலில் 1/2 கிலோ மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி இட்லி பானையில் வைத்து அவித்துக் கொள்ளுங்கள். எப்பவும் போல மரவள்ளிக்கிழங்கை வேக வைப்போம் அல்லவா. அதேபோல வேகவைத்து தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டிகள் இல்லாமல் அதை ஸ்மேஷரிலோ அல்லது மத்தியிலோ நன்றாக நசுக்கி கொள்ளவும்.

- Advertisement -

அவித்து மசித்து வைத்திருக்கும் இந்த மரவள்ளிக்கிழங்கோடு அரிசி மாவு 1 கப், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், சில்லி ஃப்ளெக்ஸ் 1 ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூன், சாட் மசாலா 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக உங்கள் கையை கொண்டு பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இருக்காது. கொஞ்சம் கெட்டியாகவே பிசைந்து கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு போல ஒரு மாவு கிடைத்திறுக்கும் அல்லவா.

உங்களுடைய கையிலே எண்ணெயை தொட்டு இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி கட்லெட் வடிவத்திலும் தயார் செய்யலாம். இல்லையென்றால் இதை நீல வாக்கில் நம்முடைய விரல்கள் போல தடிமனாகவும் உருட்டிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். எல்லா மாவையும் ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அதில் கொஞ்சமாக மிளகுத்தூள், ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இப்போது தயார் செய்து வைத்திருக்கும் கட்லெட்டுகளை இந்த முட்டையில் முக்கி, அப்படியே பிரட் கிராம்சின் மேலே போட்டு, இரண்டு பிரட்டு பிரட்டி இதை அப்படியே சுட சுட இருக்கும் எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுத்தால், சூப்பரான சர்க்கரை மரவள்ளிக்கிழங்கு கட்லெட் ரெடிங்க.

ஈவினிங் டைம் லேசாக ஜில்லுனு காத்து வீசும் போது இந்த ஸ்நாக்ஸை டீ கூட பரிமாறி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க. அவ்வளவு ருசியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குடை மிளகாய் இருந்தா இட்லி தோசைக்கெல்லாம் ஏற்ற சுவையான இந்த சட்னியை டிரை பண்ணி பாருங்க. ரொம்பவே வித்தியாசமான இந்த சட்னியை உங்க வீட்ல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

முட்டை பிடிக்காது. நீங்கள் சைவம் என்பவர்கள், மைதா மாவை கரைத்தும் இந்த கட்டளைகளை முக்கி எடுக்கலாம். அப்படி இல்லை என்றால் கான்பிளவர் மாவை தண்ணீரில் கரைத்து வைத்து அதில் கூட இந்த கட்லெட்டை முக்கி எடுத்து பிறகு பிரட் கிராம்சில் டிப் செய்து பொறித்து எடுத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -