ஆரோக்கியம் மிகுந்த சின்ன வெங்காய சட்னிக்கு தக்காளி கூட தேவையில்லை மூன்றே பொருளில் 4 நிமிடத்தில் ருசியான சட்னி அரைப்பது எப்படி?

chinna-vengayam-chutney
- Advertisement -

மற்ற சட்னி வகைகளை காட்டிலும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் பொழுது அது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எப்பொழுதும் வீட்டில் பெரிய வெங்காயத்தை விட, சின்ன வெங்காயம் அதிகம் வைத்திருக்க வேண்டும். சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள் நம் உடலை எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க செய்யும். ஈஸியான சின்ன வெங்காய சட்னி ஐந்து நிமிடத்தில் எப்படி வீட்டிலேயே கடகடன்னு அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சின்ன வெங்காயச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 30, நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 5, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கல் உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன் உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத் தூள் – சிறிதளவு.

- Advertisement -

சின்ன வெங்காய சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் சின்ன வெங்காயம் 30 எடுத்துக் கொள்ளுங்கள். இதை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு தோலை உரித்தால் கண் தெரியாமல் சீக்கிரமாக உரிந்து வந்துவிடும். மேல் பாகம் மற்றும் அடிப்பாகத்தை எடுத்து விட்டு தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள்.

அதில் நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வருமாறு வதக்க வேண்டும். வெங்காயம் எண்ணெயை ஈர்த்து சுருள வதங்கி வரும் போது 5 வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் காரத்திற்கேற்ப மிளகாயின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு இதன் புளிப்பு சுவைக்கு தக்காளி எதுவும் நாம் சேர்க்கப் போவதில்லை எனவே சிறு நெல்லிக்காயளவு எடுத்து புளியை விதைகள் மற்றும் நார் நீக்கி சுத்தம் செய்து எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு இந்த மூன்றே பொருட்களைக் கொண்டு ரொம்பவே சுலபமாக செய்து விடலாம். லேசாக 2 நிமிடம் வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து கொஞ்சம் போல எண்ணெயை விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்து பெருங்காயத் தூள் சிறிதளவு போட்டு கம கமக்க சட்னியுடன் கொட்டி இறக்கினால் ஆரோக்கியம் நிறைந்த சின்ன வெங்காய சட்னி ரொம்ப சுலபமாக தயாராகி விடும். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -