இப்படி மசாலா அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் இது ஹோட்டலில் வாங்கியதா? என்று கேட்கும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும்

sambar
- Advertisement -

நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் கேழ்வரகு கஞ்சி, கம்பு கஞ்சி இவற்றை தான் காலை உணவாக எடுத்துக் கொள்வர். ஆனால் இப்பொழுதெல்லாம் இட்லி, தோசை, பொங்கல் இவைதான் அடிக்கடி அனைவரின் வீட்டிலும் காலை உணவாக இருக்கிறது. இதனுடன் தொட்டுக்கொள்ள செய்யும் ஒரு குழம்பு வகை என்றால் அது பெருமளவில் சாம்பாராக தான் இருக்கும். இந்த சாம்பாரை காலையில் செய்துவிட்டால் மதிய உணவிற்கும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காலையிலேயே சாம்பார் வைத்து விடுவார்கள். ஆனால் இட்லி, தோசைக்கும், சாதத்திற்கும் செய்யப்படும் சாம்பாரின் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். காலை செய்யும் உணவுகளுக்கென்று இவ்வாறு தனியாக சாம்பார் வைத்து பாருங்கள். இதன் சுவை எப்பொழுதும் நீங்கள் வைக்கும் சாம்பாரை விட அசத்தலாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

arisi-kanji

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 150 கிராம், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், தனியா – 2 ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, சின்ன வெங்காயம் – 150 கிராம், பெரிய வெங்காயம் – 1, கேரட் – 1, கத்தரிக்காய் – 3, பீன்ஸ் – 5, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, புளி – எலுமிச்சை பழ அளவு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், தனியாத் தூள் – 2 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெல்லம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

மசாலா செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, இரண்டு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் சீரகம், 10 வெந்தயம், 12 காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பத்து மிளகு சேர்த்து நன்றாக வறுத்து விட்டு, இவற்றை ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

dry

சாம்பார் செய்முறை:
முதலில் துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 அல்லது 4 விசில் வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் புளியை ஊறவைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து கலந்துவிட்டு, இவற்றுடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் செய்து வைத்துள்ள மசாலாவில் இருந்து 3 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

idli-sambar2

இவை நன்றாக கொதித்ததும் இவற்றுடன் புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வேக வைத்த பருப்பை கடைந்து இவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்னர் இறுதியாக இரண்டு ஸ்பூன் மசாலா மற்றும் அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் ஹோட்டல் சுவையில் சுவையான டிபன் சாம்பார் தயாராகிவிட்டது.

- Advertisement -