உங்களுக்கு ரசம் வைக்க வரவில்லையா? அப்படின்னா இப்படி செஞ்சு பாருங்க வீடே மணக்கும் ரசத்தை நீங்களும் செய்து அசத்தலாம்!

rasam
- Advertisement -

ஒரு சிலர் எல்லாம் கஷ்டமான சமையலைக் கூட ரொம்பவே சுலபமாக செய்து அசத்தி காட்டி விடுவார்கள். ஆனால் சாதாரண ரசத்தை செய்வதற்கு மட்டும் ஏனோ அவர்களுக்கு வரவே செய்யாது. மற்ற எல்லாமே சூப்பரா இருக்கு, ஆனால் ரசம் கூட வைக்க தெரியவில்லையே! என்று பலரும் உங்களை பார்த்து கேள்விக்கணைகளை தொடுத்து இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆக நீங்கள் இருந்தால், வீடே மணக்கும் ரசத்தை இப்படி செய்து அசத்தி காட்டுங்கள். சுவையான ரசம் வைப்பது எப்படி? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

puli-tamarind

ரசம் வைக்க தேவையான பொருட்கள்:
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 3, பூண்டுப்பற்கள் – 10, பெரிய தக்காளி – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

- Advertisement -

ரசம் செய்முறை விளக்கம்
முதலில் ரசம் வைக்க ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை அழுத்தமாக கைகளில் உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதற்குள் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் ரசம் வைக்க தேவையான பொடியை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

milagu-rasam2

மிளகு, சீரகம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். மிகவும் நைசாக அரைக்க கூடாது. பாதி அரைபட்டதும் திறந்து பூண்டு பற்களை தோலுடன் அப்படியே சேர்த்து ஒரு முறை சுற்றி எடுத்து விட வேண்டும். தக்காளி மற்றும் மல்லி இலைகளை சுத்தம் செய்துவிட்டு பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். நன்கு காய்ந்ததும் தாளிக்க கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி பழங்கள் வதங்க கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைத்தால் இரண்டு நிமிடத்தில் தக்காளி நன்கு மசிய வதங்கி விடும். அதற்குள் ஊற வைத்த புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

rasam

தக்காளி வதங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் நீங்கள் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை வடிகட்டி ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான சுவையில், அற்புதமான ரசம் ரெடி ஆகி இருக்கும். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த ரசம் வைத்தால் நீங்களே உங்களை நினைத்து ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். இதே அளவுகளில் முயற்சி செய்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடலாமே!

- Advertisement -