தோசைக்கு கோதுமை மாவை அப்படியே கரைச்சு இனிமே ஊத்தாதீங்க! இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க 10 தோசை கூட சாப்பிடலாம்.

wheat-dosai1
- Advertisement -

பொதுவாக கோதுமை தோசை என்றாலே பலருக்கும் சுத்தமாக பிடிக்காது. ஆனால் கோதுமையில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கோதுமை தோசையின் மூலம் நமக்கு கிடைக்கிறது. கோதுமை தோசையை எப்பொழுதும் போல அப்படியே கரைச்சி ஊற்றாமல் வித்தியாசமான முறையில் கோதுமை தோசை மாவை கரைக்கும் பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கோதுமை தோசையை எப்படி கலர்ஃபுல்லாக சூப்பரான சுவையில் கொடுப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

wheat

கார கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 2 கப், தயிர் – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு, கரம் மசாலா – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

கார கோதுமை தோசை செய்முறை விளக்கம்:
காரசாரமான இந்த கோதுமை தோசை பார்ப்பதற்கே சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும் படி செய்யப் போகிறோம். இதற்கு ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எந்த கப்பில் கோதுமை மாவை அளந்து எடுத்தீர்களோ, அதே அளவிற்கு 2 கப் தண்ணீர் ஊற்றுங்கள். இந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி மாவு கரைத்தால் சரியாக இருக்கும்.

curd

புளிக்காத தயிர் அரை கப் அளவிற்கு அளந்து ஊற்றுங்கள். பின்னர் பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து தோலுரித்து பொடிப் பொடியாக நறுக்கி சேருங்கள். மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை அளவில் தூவி விடுங்கள். பின்னர் அரை டீஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகம் சேர்க்க கூடாது. காரத்திற்கு பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சிறு குழந்தைகள் சாப்பிட முடியாது என்பதால் அதற்கு பதிலாக மிளகு தூள் மற்றும் மிளகாய்த் தூளை சேர்த்துக் கொள்ளலாம். மிளகை லேசாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு சிட்டிகை அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பொடி பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றை கலந்து நன்கு கரைக்க வேண்டும். கொஞ்சம் கூட கட்டிகளில்லாமல் நீர்க்க கோதுமை மாவை கரைத்து கொள்ள வேண்டும். கொத்தமல்லி தழைக்கு பதிலாக கஸ்தூரி மேத்தி இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம். அது இன்னும் கூடுதல் சுவை கொடுக்கும்.

wheat-dosai0

மாவை இந்த அளவிற்கு கரைத்துக் கொண்ட பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். கல் சூடானதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக தோசை வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக ஆனதும் திருப்பி போட்டு எடுத்தால் சுடச்சுட கார கோதுமை தோசை சூப்பரான முறையில் தயாராகி இருக்கும். பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த கோதுமை தோசையை யாரும் வேண்டாம் என்று கூறாமல் சாப்பிட்டு விடுவார்கள். எனவே அவசரத்திற்கு கோதுமை தோசை சுடணும்னா இனி இப்படி செய்து பார்த்து பயன் பெறுங்கள்.

- Advertisement -