உளுத்தம் பருப்பு இருந்தா போதும் 10 நிமிடத்தில் இந்த சட்னி செய்து வீட்டில் அனைவரின் பாராட்டையும் பெற்று விடலாமே!

ulunthu-chutney-recipe1
- Advertisement -

தக்காளி, தேங்காய் எல்லாம் எதுவும் சேர்க்காமல் ஆரோக்கியமான முறையில் உளுந்தம் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த காரச் சட்னி ரொம்பவே சுலபமானது. நம் வீட்டில் இருக்கும் குறைந்த பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த சட்னி 10 நிமிடத்தில் செய்து விடலாம். உளுந்தில் அதிக அளவிற்கு நார் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை இருப்பதால் இதனை அடிக்கடி பெண்கள் சேர்த்துக் கொள்வது இடுப்பு எலும்புக்கு பலம் சேர்க்கும். எனவே இந்த சுவையான உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

ulunthu

உளுந்து கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – தேவையான அளவு, உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 3, பூண்டு பற்கள் – 20, வர மிளகாய் – 5, புளி – சிறிய கோலி அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

உளுந்து கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு முழு வெள்ளை உளுந்து சேர்க்க வேண்டும். உளுந்து அதிகம் சேர்ப்பதால் சட்னி கெட்டியாக இருக்கும். மேலும் உளுந்தில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். எனவே இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம்

உளுந்தை பொன்னிறமாக வறுத்ததும் அதனுடன் தோலை நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நல்ல கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும் பதினைந்திலிருந்து, இருபது பூண்டு பற்கள் அதன் அளவிற்கு ஏற்ப தோல் உரித்து சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு, வெங்காயம், உளுந்து எல்லாம் சேர்ப்பதால் ஆரோக்கியம் பலப்படும்.

- Advertisement -

பூண்டு பற்கள் லேசாக வதங்கியதும் வர மிளகாய் ஐந்து சேர்த்துக் கொள்ளுங்கள். நீள நீளமாக இருக்கும் காய்ந்த மிளகாயை சேர்த்துக் கொள்வது நல்லது. குண்டு மிளகாய் என்றால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் அதில் காரம் அதிகமாக இருக்கும். சிறிய கோலி குண்டு அளவிற்கு புளியை சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விட வேண்டியது தான். பின்னர் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதற்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும்.

ulunthu-chutney-recipe

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விட வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். உளுந்து வதங்கி வந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு வர மிளகாயை கிள்ளி தாளித்து சட்னியுடன் சேர்த்து சுடச் சுட இட்லி, தோசையுடன் பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த உளுந்து சட்னி ஆரோக்கியம் மிகுந்தது என்பதால் அடிக்கடி செய்து பயன் பெறலாமே!

- Advertisement -