சுவையான ஆரோக்கியம் மிகுந்த இந்த உளுந்து துவையல் செய்வது இவ்வளவு சுலபமா? இது தெரியாம போச்சே!

- Advertisement -

வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்க்காமல் ரொம்பவே ஆரோக்கியமான ஒரு சட்னி வகை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். முழு தானியங்களை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் வலுவாகவும். அந்த வகையில் தோலுடன் கூடிய முழு உளுத்தம் பருப்புடன் துவையல் அரைத்து சாதத்துடன் தொட்டுக் கொண்டால் அட்டகாசமாக இருக்கும். சாதம் மட்டும் அல்லாமல் இட்லி, தோசைக்கு கூட சூப்பராக இருக்கும், இந்த உளுந்து துவையல் எப்படி செய்வது? என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

karuppu ulunthu

உளுந்து துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தோலுடன் கூடிய உளுந்து – ஒரு கப், சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 5, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

உளுந்து துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் உளுந்து தோலுடன் கூடிய உளுந்தாக இருப்பது மிகவும் நல்லது. உங்களிடம் இல்லை என்றால் சாதாரண உளுந்து எடுத்துக் கொள்ளலாம். தோலுடன் கூடிய உளுந்து அதிகம் ஆரோக்கியம் நிறைந்தது, எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடியது. முதலில் ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். பின்னர் ஒரு கப் அளவிற்கு உளுந்தை எண்ணெயில் சேர்த்து நன்கு வாசனை வர வறுத்து எடுக்க வேண்டும். அதன் நிறம் சற்று மாறும், அந்த சமயத்தில் நீங்கள் அடுப்பை அணைத்துவிட்டு உளுந்தை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

black-urad-dal

பின்னர் அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் ஐந்து வர மிளகாய்களைப் போட்டு லேசாக கருக விடாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மல்லி விதைகள் மற்றும் சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இவை நன்கு வாசம் வர வதங்கிய பின்பு அரை கப் அளவிற்கு தேங்காய் துருவல் அல்லது தேங்காய் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்குங்கள். இவைகள் நன்கு வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். ஆறிய தேங்காயுடன் கூடிய இந்த பொருட்களை முதலில் போட்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள உளுந்தையும் சேர்த்து நன்கு தண்ணீர் விடாமல் அரைக்கவும். பிறகு இறுதியாக நீங்கள் ஊற வைத்துள்ள புளியை தண்ணீருடன் அப்படியே சேர்த்து, கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால் அரை கப் அளவிற்கு தண்ணீரை சேர்த்து துவையல் போல கெட்டியாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த சுவையான உளுந்து துவையலுக்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

black-urad-dal-chutney1

தாளிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நிறைய சேர்ப்பதால் சட்னியின் சுவை அதிகரிக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்து சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -