சுவையான வேர்கடலை வத்த குழம்பை இவ்வாறு ஒருமுறை செய்து பாருங்கள். ஒரு தட்டு சாதத்திற்கு ஒரு ஸ்பூன் குழம்பே போதும். அவ்வளவு சுவையாக இருக்கும்

kulambu
- Advertisement -

சமையல் செய்வதை விட அது மிகவும் ருசியாக இருக்க வேண்டும் என்பதுதான் பெண்களுக்கு இருக்கும் மிகப்பிரிய பொறுப்பாகும். அவ்வாறு செய்யும் உணவில் ஏதேனும் குறை இருந்தது என்றால் அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் குறைகூறிக் கொண்டே தான் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளும் அன்றைய உணவை விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் மிகவும் சுவையான உணவு வகைகளை சமைப்பதற்காக பெண்கள் ஏதாவது ஒரு புது யுக்தியை பயன்படுத்ததான் செய்கிறார்கள். அவ்வாறு உங்கள் சமையலின் சுவையைக் கூட்டுவதற்காக இந்த வேர்க்கடலை வத்தக்குழம்பை ஒருமுறை செய்து பாருங்கள். தட்டு நிறைய சாதத்திற்கும் ஒரு ஸ்பூன் குழம்பு மட்டுமே போதுமானதாக இருக்கும். அவ்வளவு க்ரீமியாகவும், சுவையாகவும் இருக்கும். வாருங்கள் இந்த குழம்பை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

eating food

வேர்க்கடலை வத்த குழம்பு செய்முறை:
முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதனை நன்றாக கரைத்து புளி சாறு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 கிராம் வேர்க்கடலையைப் தோலுரித்து வைக்க வேண்டும்.

- Advertisement -

தோலுரித்த 20 சின்ன வெங்காயம் இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து திக்கான தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயம்

அதன் பின்னர் வேர்க்கடலையுடன் 5 பல் பூண்டு மற்றும் ஒரு டம்ளர் தேங்காய் பால் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

masala idli

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் தனியா தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிய பின்னர், அரைத்து வைத்துள்ள வேர்கடலை பேஸ்ட் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

சிறிது நேரத்தில் குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு தட்டை போட்டு மூடி 10 நிமிடம் சிறிய தீயில் அப்படியே கொதிக்க விடவேண்டும். பின்னர் தட்டை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி குழம்பை கீழே இறக்க வேண்டும். இப்போது ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுண்டைக்காய் வத்தல், தக்காளி வத்தல் மிளகாய் வத்தல் இவற்றில் ஏதேனும் ஒரு வத்தளை சிறிதளவு இந்த எண்ணெயுடன் சேர்த்து பொரித்து குழம்பில் சேர்க்க வேண்டும்.

sundaikai-vathal

அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை வத்தல் குழம்பு தயாராகிவிட்டது. ஒருமுறை நீங்களும் இவ்வாறு செய்து உங்கள் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்துப் பாருங்கள். தட்டு நிறைய சாதம் கொடுத்தாலும் தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -