சூப்பரான மொறு மொறு டீக்கடை கீரை வடை ரெசிபியை இப்படி செஞ்சு பாருங்க. சுவை மிஸ்ஸே ஆகாது.

vadai
- Advertisement -

என்னதான் வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும், டீக்கடை கீரை வடை போல சுவை இருக்காது. மொறுமொறுப்பாக வராது. கடையில் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டால் தான் திருப்தி இருக்கும். டீக்கடையில் கிடைக்கும் அதே மொறு மொறு கீரை வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரான ரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பான வடை நம்ம வீட்லயும் கிடைக்கும்.

செய்முறை

இதற்கு முதலில் 1 கப் கடலைப்பருப்புக்கு, 1/4 கப் உளுந்தம் பருப்பு நமக்கு தேவைப்படும். 1 டம்ளரை எடுத்து அதில் 1 டம்ளர் கடலை பருப்பு அளந்து கொள்ளுங்கள். அதே டம்ளரில் 1/4 கப் உளுந்து அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் தனித்தனியாக பாத்திரத்தில் போட்டு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் ஊற வைத்த உளுந்தை தண்ணீர் அனைத்தையும் முழுமையாக வடித்து விட்டு சேர்க்கவும். உளுந்தை முதலில் 70 விழுக்காடு அறைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பையும் தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் போட்டு மீண்டும் அரைக்கவும். உளுந்தம் பருப்பும் கடலைப்பருப்பும் சேர்ந்து, பருப்பு கொரகொரப்பாக அரைப்பட்டு இருக்க வேண்டும்.

அரைப்பட்ட இந்த பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதில் சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், தோலுடன் இடித்த பூண்டு பல் – 10, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, மிகப் பொடியாக நறுக்கிய – கீரை 2 பெரிய கைப்பிடி. பெரும்பாலும் கடைகளில் அரைக்கீரை சேர்த்து வடை செய்வார்கள். நம்முடைய வீட்டில் எந்த கீரை இருக்கிறதோ சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

சிறு கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, முருங்கைக் கீரையில், செய்தாலும் இந்த வடை மிக சுவையாக இருக்கும். எந்தக் கீரையாக இருந்தாலும் மிகப் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது‌. இறுதியாக வடைக்கு தேவையான அளவு உப்பு போட்டு உங்கள் கைகளை கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை கொண்டைக்கடலை இருந்தா சூப்பரான இந்த சைவ கோலா உருண்டை ரெசிப்பியை இன்னைக்கே செஞ்சு அசத்துங்க!

அடுப்பில் கடாயை வைத்து வடையை பொரிப்பது எடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றுங்கள். இப்போது வடை மாவை உருண்டை செய்து உள்ளங்கைகளில் வைத்து பெரியதாக தட்டி டீக்கடையில் கிடைக்கும் பெரிய பெரிய வடை போல சுட்டாலும் சரி, அல்லது உங்கள் விருப்பம் போல மசால்வடை போல சின்ன சின்னதாக தட்டி எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தாலும் சரி, சூப்பரான வடை தயாராகி இருக்கும். ஈவினிங் டீ குடிக்கும் போது இந்த வடையை, ஒரு தேங்காய் பச்சை மிளகாய் சட்னியுடன் பரிமாறி பாருங்க. அதுவும் இப்போது இருக்கும் கிளைமேட்டுக்கு சுட சுட டீ உடன் இந்த வடை செம காம்பினேஷனா இருக்கும்.

- Advertisement -