உச்சந்தலைக்கு ஏறும் டென்ஷனை உடனடியாக குறைக்க இந்த நம்பரை ஒருமுறை எழுதினாலே போதும். தலையை ஃப்ரிஜ்க்குள் வைத்தது போல ரிலாக்ஸ் ஆகி விடுவீர்கள்.

number
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது. ஏதாவது ஒரு வேலை, ஏதாவது ஒரு பிரச்சனை, ஏதாவது ஒரு தேவைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டத்திற்கு நடுவில் நிம்மதியாக அமர்ந்து 5 நிமிடம் சந்தோஷமாக இருந்தேன் என்று யாராவது சொல்ல முடியுமா. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இறுதியில் மிஞ்சுவது டென்ஷனும் தலைவலியும் தான். எப்போதுமே இப்படி டென்ஷனோடு தலைவலியோடு இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். நம்முடைய நிம்மதி கெடுவதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா அடுத்தவர்கள் பற்றிய டென்ஷனை தேவை இல்லாமல் நம் தலையில் ஏற்றிக் கொள்வதுதான்.

நம் தலையை சுற்றி இருக்கும் டென்ஷனை, நெகட்டிவ் எனர்ஜியை, கெட்ட ஆற்றலை விரட்டியடிக்க ஒரு எளிமையான வழி உள்ளது. அதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த சீக்ரெட் மெத்தட், நம்பர் வடிவில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நம்பரை எப்படி பயன்படுத்தினால் நம்முடைய மனதை நாமே ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்ற ரகசியத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மனதை ரிலாக்ஸ் செய்ய தந்திர முறை:
டென்ஷனோடு தலைவலியோடு யார் மீதோ கோபத்தோடு இருக்கிறீர்கள். உங்களை உங்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. ரத்தக்கொதிப்பு அதிகரிக்கிறது. எப்படி ரிலாக்ஸ் ஆவது. கண்களை மூடி முதுகு தண்டுவடத்தை நேராக நிறுத்தி அமைதியாக ஒரு இடத்தில் அமருங்கள். அந்த இடம் கொஞ்சம் சுத்தமாக வாசம் நிறைந்த, அழகான இடமாக இருக்கட்டும். வீட்டிற்கு உள் பக்கத்தில் இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் ஏதாவது வெளியிடங்களில் இருந்தாலும் சரி அல்லது ஏதாவது ஒரு பார்க் மரத்தடியில் அமர்ந்தாலும் சரிதான்.

மனதிற்குள்ளேயே 0927 இந்த எண்ணை 11 முறை சொல்லுங்கள். அதன் பின்பு உங்களுடைய பிரச்சனை என்னவோ, அதை எடுத்து அப்படியே நெருப்பில் போட்டு பொசுக்கி விட்டதாக மனதார நினைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி இருக்கும் போது நெருப்பு தெரிய வேண்டும். நெருப்பில் உங்களுடைய பிரச்சனைகளை போட்டு பொசுக்கி விட்டீர்கள். அவ்வளவு தான். எல்லா பிரச்சினைகளும் நெருப்போடு நெருப்பாக பொசிக்கிவிட்டது. இனிமேல் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மனதார நினைத்துக் கொண்டால் உடனடியாக மனது லேசாகும்.

- Advertisement -

வீட்டில் இருக்கிறீர்கள் அல்லது உங்களுடைய கையில் பேனா பேப்பர் இருக்கிறது என்றால் உடனே அந்த பேனா பேப்பரை எடுத்து அதில் 0927 என்ற எண்ணை 11 முறை எழுதி அதன் கீழே உங்களுடைய பிரச்சனையை எழுதி அந்த பேப்பரை உங்கள் தலையை சுற்றி அப்படியே நெருப்பை மூட்டி பொசிக்கி விடுங்கள். அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து விடுங்கள். அல்லது நசுக்கி காற்றோடு காற்றாக ஊதி விட்டு விடுங்கள். உடனடியாக உங்களுடைய மனசு ரிலாக்ஸ் ஆகிவிடும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

கேட்பதற்கு இந்த தந்திரமான முறை பைத்தியக்காரத்தனமாகத்தான் இருக்கும். ஆனால் இதை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய நெகட்டிவ் எனர்ஜி உங்களை சுற்றி இருந்தாலும், எவ்வளவு பெரிய டென்ஷன் உங்கள் மண்டைக்குள் இருந்தாலும் அது அப்படியே குறையும். நீங்கள் உடனடியாக ரிலாக்ஸ் ஆகி விடுவீர்கள். எதுவுமே செய்ய முடியவில்லையா? டென்ஷனாக இருக்கும்போது இந்த நம்பரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். தானாக ரிலாக்ஸ் ஆகி விடுவீர்கள். இந்த சூட்சமமான மெத்தட் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய மன அழுத்தம் குறைய இதுவும் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.

- Advertisement -