தைப்பூசம் வெற்றிவேல் முருகன் வழிபாடு

murugan3
- Advertisement -

வெற்றி என்றதுமே நம் நினைவுக்கு வரக்கூடிய கடவுள், வெற்றி வேல் முருகன் தான். தைப்பூசம், இது வெற்றிக் கடவுளான முருகருக்கே உரியது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். பார்வதி தேவி தன்னுடைய சக்தியை, வேல் ரூபமாக முருகனுக்கு கொடுத்த நாள் இந்த தைப்பூசம். நாளை இந்த தைப்பூச நாளில் உங்களுடைய வீட்டில் எப்படியாவது இந்த வழிபாட்டை செய்யத் தொடங்கி விட்டால் முருகர் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கொடுத்துக் கொண்டே இருப்பார்.

ஏனென்றால் இவர்தான் வெற்றியின் கடவுள் ஆயிற்றே. பொருளாதாரத்தில் முன்னேறனும், நோய் நொடி இல்லாமல் வாழனும், வீண் விரைய செலவு குறையனும், வெற்றி மேல் வெற்றி குவியனும், என்று வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஆன்மீகம் சார்ந்த வழி இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முருகர் பக்தர்கள் இதைப் படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

தைப்பூச வேல் வழிபாடு

நிறைய பேருக்கு வேல் வழிபாடு வீட்டில் செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் இருக்கிறது. முருகன் கையில் இருக்கும் வேலை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. யார் வேண்டும் என்றாலும் வீட்டில் பூஜை அறையில் வேல் வைத்து வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது. பூஜை அறை தனியாக இல்லை வரவேற்பு அறையில் தான் இருக்கிறது, சமையல் அறையில் தான் இருக்கிறது என்றாலும் வேல் வழிபாடு செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

உங்க பூஜை அறையில் ஏற்கனவே வேல் இருந்தால், அந்த வேலுக்கு இந்த வழிபாடு செய்யுங்கள். வேல் இல்லாதவர்கள் நாளை முருகர் கோவிலுக்கு சென்று புதுசாக ஒரு வேல் வாங்கி, நாளை மாலை வீட்டில் இந்த வேலை வைத்து வழிபாடு செய்ய தொடங்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு நாளையிலிருந்து வெற்றி மேல் வெற்றி குவிய தொடங்கி விடும். வேல் உங்கள் வீட்டில் நுழையும் போதே வெற்றியும் உங்களோடு சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்து விடும்.

- Advertisement -

நாளை காலை நேரத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளை காலையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை 9.30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்யுங்கள். அப்போதுதான் பூசம் திதி பிறக்கின்றது. மாலை நேரத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளை வேலுக்கு கட்டாயம் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சுத்தமான தண்ணீரில் முதலில் அபிஷேகம் செய்துவிட்டு, பசும்பால் கிடைத்தால் அதை வாங்கி கால் டம்ளர் அளவு அந்த வேல்மீது ஊற்றி அபிஷேகம் செய்வது சிறப்பு. இது தவிர, வசதி உள்ளவர்கள் தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இப்படி பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு கட்டாயம் நாளைய தினம் வேலுக்கு ஒரு நிவேதியம் வைக்க வேண்டும். இரண்டு வாழைப்பழம் வைத்தாலும் சிறப்பு. முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு நிவேதனம் வைத்துவிட்டு, புஷ்பங்களால் வேலுக்கு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். 108 முறை அர்ச்சனை செய்யும் போது ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனையின் போது செவ்வரளி பூக்களை மறக்காதீங்க. நாளை செவ்வரளி பூ ரொம்ப ரொம்ப முக்கியம். அடுத்து, தூபா தீப ஆராதனை காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். மனநிறைவோடு நாளை நீங்கள் செய்யும் இந்த வேல் வழிபாடு உங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுக்கும். உங்களை பொருளாதாரத்தில் உயர்த்தி விடும்.

உங்கள் சுமைகளை எல்லாம் குறைத்து விடும். இந்த வேல், பூஜை அறையில் அப்படியே இருக்கட்டும். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமையில், கிருத்திகை சஷ்டி திதி வரும்போது, இந்த வேலுக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து இரண்டு வாழைப்பழங்களை நிவேதனமாக வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே: சிவராஜ யோகத்தால் ஆளும் யோகம் யாருக்கு

முருகப்பெருமானின் அருள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கிடைக்கும். உங்க வீட்டில் வேலை இருக்கிறதா? இல்லை என்றால், நாளை முருகன் கோவிலில் இருந்து வேல் வாங்கி வந்து வழிபாடு செய்ய மறக்காதீங்க என்ற இந்த தகவலை மீண்டும் நினைவுகூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -