வெங்காயம் சேர்க்காமல் தக்காளி சட்னி இப்படி ஒரு முறை அரைச்சு பாருங்க இதைவிட டேஸ்டியான சட்னி இருக்கவே முடியாது!

tomato-coriander-chutney
- Advertisement -

ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த சட்னிக்கு வெங்காயம் கூட தேவையில்லை. 4 தக்காளி பழங்கள் இருந்தால் போதும், டேஸ்டான அசத்தலான சுவையுள்ள ஒரு சூப்பர் சட்னி செய்து விடலாம்! விதவிதமான சட்னி வகைகள் செய்து பார்ப்பவர்கள், இந்த சட்னியையும் ஒரு முறை இதே அளவுகளில் செய்து பாருங்கள். இதை விட டேஸ்ட்டான சட்னி இருக்கவே முடியாது என்று நீங்களே சொல்வீர்கள். சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
மிளகு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், வர மிளகாய் – 7, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், தக்காளி – 4, தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி பழங்களை சுத்தம் செய்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் முதலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்து கருக விடாமல் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு வறுபட்டு புகை வர ஆரம்பிக்கும் பொழுதே எடுத்து விட வேண்டும். பின்னர் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.

லேசான வெந்தயத்தின் வாசம் ரொம்ப அற்புதமாக இருக்கும். 2 நிமிடம் வதக்கிய பின் எடுத்து விடுங்கள். பின்னர் அதே வாணலியில் வர மிளகாய்கள் உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் நெடி எடுக்காமல் இருக்க சிட்டிகை அளவிற்கு உப்பை தூவி விட்டு வதக்குங்கள். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டும் நல்லெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி பழங்கள் பச்சை வாசம் கொஞ்சம் கூட வரக் கூடாது, எனவே நன்றாக மசிய வதக்க வேண்டும். தக்காளி வதங்கிய பின்பு அரை கப் அளவிற்கு துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பொன்னிறமாக அடிப்பிடிக்காமல் வதக்க வேண்டும். 5 நிமிடம் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். அதற்கு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சட்னியுடன் இவற்றை போட்டு தாளித்து இட்லி, தோசையுடன் பரிமாறினால் எவ்வளவு இட்லிகள் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு சுவையான ருசியில் கொடுக்கக் கூடிய இந்த தக்காளி சட்னி இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -