வழக்கமா செய்யுற தக்காளி சட்னியை ஒதுக்கி வையுங்க. புதுவிதமா இப்படி தக்காளி சட்னி அரைச்சு பாருங்க இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும்.

chutney_tamil
- Advertisement -

பொதுவாக தக்காளி சட்னி என்றால், அதில் வரமிளகாய் தான் சேர்த்து நாம் செய்வோம். ஆனால் இந்த தக்காளி சட்னியை கொஞ்சம் வித்தியாசமாக பச்சை மிளகாய் சேர்த்து செய்யப் போகின்றோம். வழக்கம்போல அரைக்கக் கூடிய தக்காளி சட்னி கிடையாது. இது முற்றிலும் வித்தியாசமான சுவையில் ஒரு தக்காளி சட்னி ரெசிபி ஒன்று மற்றும் தக்காளியை வைத்து செய்யக்கூடிய இன்னொரு சட்னி ரெசிபி ஆக மொத்தம் இரண்டு ரெசிபி இதோ உங்களுக்காக. சுட சுட இட்லி தோசை கூட இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு 1:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் வெட்டிய பச்சை மிளகாய் 4 லிருந்து 5 போட்டு, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, வதக்க வேண்டும். பச்சை மிளகாய் வதங்கி லேசாக மிளகாய் வதங்கிய வாசம் வரும் அல்லவா. அப்போது நறுக்கிய – 1 இன்ச் இஞ்சி, தோல் உரித்த பூண்டு பல் – 8, சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு வதக்க வேண்டும். அடுப்பு சிம்மிலேயே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு நறுக்கிய தக்காளி பழம் – 4, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு தக்காளி பழத்தை முதலில் ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு 1 இன்ச் அளவு புளியை இதில் சேர்க்க வேண்டும். பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை கொஞ்சம் காம்புகளோடு நறுக்கி இதில் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இது நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் திக்காக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி திக்காக இருந்தால் தான் நன்றாக இருக்கும். அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், வரமிளகாய், போட்டு தாளித்து இந்த சட்னியில் கொட்டி கலந்து பரிமாறி பாருங்கள். அம்புட்டு ருசி கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 ஸ்பூன், ஊற்றி தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 பல், தோலுரித்த பூண்டு – 5 பல், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு வதக்க வேண்டும். பெரியதாக இருக்கும் 4 தக்காளி பழங்களை வெட்டி போட்டு, 2 அல்லது 3 வர மிளகாய்களை போட்டு, தேவையான அளவு உப்பு தூள் தூவி, ஒரு மூடி போட்டு இதை அப்படியே வேக வையுங்கள். தக்காளியின் பச்சை வாடை போக சூப்பராக வெந்து நமக்கு கிடைக்கும்.

இந்த விழுதை ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் புளிப்பு சுவை அதிகமாக இருந்தால், இதில் ஒரு சின்ன துண்டு வெல்லம் வைத்து அரைத்துக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அரைத்து வைத்திருக்கும் இந்த சட்னியை கடாயில் ஊற்றி 30 செகண்ட் வரை கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விட்டால் இந்த தக்காளி சட்னி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -