தினம் தினம் இந்த தக்காளி சாதம் கிடைக்குமான்னு உங்க நாக்கு கேட்க ஆரம்பிச்சிடும். ஒரு வாட்டி இப்படி தக்காளி சாதம் செஞ்சு சாப்பிட்டு பாருங்களேன்.

thakkali sadham
- Advertisement -

இரண்டு விதத்தில் தக்காளி சாதம் செய்வோம். குக்கரில் எல்லா பொருட்களையும் தாளித்து ஊற்றி, பட்டை இலவங்கம் போட்டு குஸ்கா போல செய்வது ஒரு ரகம். கடாயில் வெங்காயம் தக்காளி தொக்கு செய்து அதில் வெள்ளை சாதத்தை போட்டு கிளறுவது ஒரு ரகம். இன்று நாம் பட்டை லவங்கம் போன்ற பொருட்களை சேர்க்காமல் சாதத்தை வடித்து கிளறக்கூடிய தக்காளி சாதத்தை தான் பார்க்கப் போகின்றோம். சாதத்தை வடித்துவிட்டால், மிக மிக சுலபமாக இந்த தக்காளி சாதத்தை செய்து கொடுக்கலாம். லஞ்ச் பாக்ஸ்க்கு அருமையான ரெசிபி. ஆனால் இந்த தக்காளி சாதத்திற்கு ருசியை கூட்ட நாம் சில விஷயங்களை பார்த்து பக்குவமாக செய்யப் போகின்றோம். வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் 2 பெரிய கப் அளவு சாதம் நமக்கு தேவை. அதாவது நான்கு பேர் சாப்பிடும் அளவிற்கு சாதத்தை வடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பாசுமதி அரிசியாக இருக்கட்டும். சாப்பாட்டு அரிசியாக இருக்கட்டும். பச்சரிசியாக இருக்கட்டும். சாதம் குழையாமல் உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு தேவை. (சாதத்தில் கொஞ்சம் உப்பு போட்டு வடித்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் – அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உளுந்து – 1 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/4 ஸ்பூன், மிளகு – 10, முந்திரி பருப்பு – 10, இந்த பொருட்களை போட்டு சிவக்க வறுக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் பொன்னிறம் வந்தவுடன் மிகப் பொடியாக சாப் செய்த பூண்டு – 10 பல், மிகப்பொடியாக சாப் செய்த – 2 இன்ச் இஞ்சி, மிகப் பொடியாக சாப் செய்த பச்சை மிளகாய் – 3, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வதக்குங்கள். பச்சை மிளகாய் லேசாக வதங்கினால் போதும். பச்சை நிறம் அதில் அப்படியே இருக்க வேண்டும். அப்போதுதான் தக்காளி சாதம் செய்து முடிக்கும் போது நமக்கு ஒரு ஃப்ளேவர் கிடைக்கும்.

அடுத்து மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்,  கருவாப்பிலை – 2 கொத்து, இந்த கிரேவிக்கு தேவையான அளவு உப்பை போட்டு, வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வந்தவுடன் மிகப் பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் – 4 சேர்த்து, நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு வேக விடுங்கள். வெங்காயம் தக்காளி எல்லாம் வெந்து குழைந்து லேசாக தண்ணீர் விட்டு ஒரு கிரேவி நமக்கு கிடைத்திருக்கும். அதில் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4  ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து விட்டு மல்லித்தழை தூவி விட்டு பிறகு வடித்து வைத்த சாதத்தை இதில் கொட்டி நன்றாக கிளறுங்கள்.

- Advertisement -

வெங்காயம் தக்காளி தொக்கிற்க்கு தேவையான அளவு சாதத்தை போட்டு பக்குவமாக கிளறிவிட்டுங்க. சாதமும் தக்காளி தொக்கும் நன்றாக கலந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி, மூடி அப்படியே பத்து நிமிடங்கள் விட்டு விடுங்கள்.

சாதம் அந்த தக்காளி தொக்கில் நன்றாக ஊறி வரும்போது நல்ல வாசமும், நல்ல சுவையும் நமக்கு கிடைக்கும். சூப்பரான இந்த தக்காளி சாதத்தை லஞ்ச் பாக்ஸ்க்கு கட்டிக் கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டாங்க. லஞ்ச் பாக்ஸ் திரும்பி வீட்டுக்கு வரும்போது காலியாக தான் வரும். இப்படி ஒரு தக்காளி சாதத்தை இப்பவே செய்து சாப்பினும் போல தோணுதா. யோசிக்காமல் நாளைக்கு மதியம் இதை உங்களோட லஞ்சா செஞ்சிடுங்க.

- Advertisement -