எப்போதும் வைக்கிற தக்காளி சாம்பாரை ஒரு முறை இப்படி வச்சு பாருங்க வெறும் சாம்பாரையே ஊத்தி குடிப்பாங்க. இந்த சாம்பார் டிபன் சாப்பாடு என எல்லாத்துக்குமே செமையா இருக்கும்.

thakkali sambar idly
- Advertisement -

சாம்பார் என்றாலே அதில் பலவகையாக உண்டு. வெங்காய சாம்பார், காய்கறி சாம்பார், மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார், நிறைய வெரைட்டி உண்டு. இந்த சமையல் குறிப்பு பதிவில் தக்காளி சாம்பாரை ரொம்ப சுலபமா அதே நேரத்தில் அதிக சுவையுடன் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த சாம்பார் செய்வதற்கு அரை கப் பாசிப்பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசி குக்கரில் சேர்த்த பிறகு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பெரிய சைஸ் பழுத்த தக்காளியாக நான்கை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்த பிறகு ஒன்னரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பருப்பை அதிகமாக வேக வைத்து விடக் கூடாது.

இப்போது குக்கரை திறந்து தண்ணீரை மட்டும் தனியாக வடித்து விட்டு, குக்கரில் பருப்பை லேசாக மத்து வைத்து கடைந்து விட்டுக் கொள்ளுங்கள். இதையும் அதிகமாக கடைந்து விடக் கூடாது. பருப்பு, தக்காளி எல்லாம் ஒன்று, இரண்டு தெரியும்படி இருக்க வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு எடுத்து வைத்த மீதி தண்ணீரையும் இதில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து மீண்டும் கொதிக்க விடுங்கள். இந்த சமயத்தில் சாம்பார் மிகவும் கெட்டியாக இருப்பது போல தோன்றினால் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஊற்றுங்கள். இதில் பச்ச தண்ணீர் ஊற்றக் கூடாது.

இப்போது இந்த சாம்பாருக்கு தாளிப்பை தயார் செய்து விடுவோம். அதற்கு 10 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் தாளிப்பிற்கு கரண்டியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிந்த பிறகு ஒரு ஸ்பூன் சோம்பையும் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பின் இந்த வெங்காயம் வதங்க கொஞ்சமாக உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: புதுவிதமாக கோதுமை மாவில் அடை இப்படியும் செய்யலாம். இட்லி தோசை மாவு இல்லாத போது கட்டாயம் இதை நீங்க ட்ரை பண்ணி பாக்கணும்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு எடுத்து ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரின் சேர்த்து ஒரு கொதி மட்டும் வந்த பிறகு கொத்தமல்லி தழைகளின் மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான தக்காளி சாம்பார் தயார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொத்தமல்லி தலை தூவும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். சாம்பாரின் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -