தலையெழுத்தை மாற்றும் தலைவாசல். தலைவாசலில் இந்த தவறை செய்தால், கெடுதலை வெற்றிலை பாக்கு வைத்து வீட்டிற்குள் நீங்களே அழைப்பதற்கு சமம்.

vasal
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கும் நம்முடைய குடும்பத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்று தான் நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். யாராவது என் குடும்பத்திற்கு கெடுதல் நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைப்போமா. அதேபோலத்தான் நிலைவாசலுக்கு உள்ளே நல்லது மட்டும்தான் நுழைய வேண்டும். கெடுதல் நுழையட்டும் என்று விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்போமா. நிச்சயம் கிடையாது.  அதற்காக நல்லதை தினம் தோறும் வா வா என்று நம்மால் அழைத்துக் கொண்டே இருக்கவும் முடியாது. நல்லது கூப்பிட்டால் தான் வரும். ஆனால் கெட்டது கூப்பிடாமலேயே நம் வீட்டிற்குள் கடகடன்னு வந்து விடும். நிலை வாசலில் நாம் எதை செய்யனும், எதை செய்ய கூடாது என்பது பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

வீடு சுபிட்சம் பெற நிலை வாசலில் செய்ய வேண்டியது:
நிலைவாசல் எந்த வீட்டில் கவனிக்கப்படாமல் பராமரிப்பு இல்லாமல் அப்படியே இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக நெகட்டிவிட்டி நுழைந்து கொண்டே இருக்கும். நீங்கள் நிலை வாசலில் கவனம் செலுத்தவில்லை என்றால், வீட்டிற்குள் கெடுதலை நீங்களே உள்ளே வா என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம்.

- Advertisement -

உதாரணத்திற்கு நிலை வாசல் சட்டம் பழுதடைந்து இருக்கிறது. நிலை வாசல் கதவு தாழ்ப்பால் போடும்போதும் திறக்கும் போதும், மூடும்போதும் சத்தம் கேட்பது. நிலை வாசல் படியை துடைத்து மஞ்சள் குங்குமம் போட்டு வைக்காமல் பூ வைக்காமல் அப்படியே அதை கவனிக்காமல் விட்டு விட்டால் உங்கள் குடும்பத்திற்கு கஷ்டம் வரும். நிலை வாசலில் எந்த விஷயம் பழுதடைந்தாலும் அதை உடனடியாக சரி பார்க்கவும்.

எதற்கு நிலை வாசலுக்கு இத்தனை முக்கியத்துவம். நிலை வாசல் படியில் தான் தெய்வங்கள் குடியிருக்கிறது. முன்னோர்கள் குடியிருக்கிறார்கள். வாஸ்து பகவானும் குடியிருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் அல்லவா. ஆகவே நிலை வாசலை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில் வெளியே பார்த்தவாறு சிறிய அளவில் கண்ணாடி வைக்கலாம். நிலை வாசலை போற்றும் வகையில் நெற்கதிரை வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. வீட்டிற்குள் செல்வ செழிப்பு ஈர்க்கப்படும். நெல் கதிர் கிடைக்கவில்லை என்றால் ஒரு கைப்பிடி அளவு நெல்லை மஞ்சள் துணியில் போட்டு கட்டி நிலை வாசலுக்கு வெளியே மாட்டி வைக்கலாம். இது அல்லாமல் வாரம் ஒரு முறை நிலை வாசலில் மாயிலை கட்டுவது வேப்பிலை வைப்பது போன்ற விஷயங்களை பின்பற்றி வர வேண்டும்.

ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விடுவது மிகவும் சிறப்பான ஒரு விஷயம். அப்படி இல்லை என்றால் ஒரு கயிற்றில் எலுமிச்சம் பழம் மிளகாய் இந்த இரண்டு பொருட்களையும் கோர்த்து நிலை வாசலில் கட்டி வைக்கலாம். மேல் சொன்ன இந்த பொருட்களை எல்லாம் பார்த்தால் கெடுத்தது பயப்படும். அப்படியே வீட்டிற்குள் நுழையாமல் பயந்து ஓடிவிடும்.

- Advertisement -

இந்த பொருட்கள் எதுவுமே நிலை வாசலில் இல்லை என்றால் கெட்டது எந்த ஒரு தடையும் இல்லாமல் நிலை வாசலுக்குள் நுழைந்து விடும். அதற்காகத்தான் நிலை வாசலில் கவனம் செலுத்துங்கள், நிலை வாசல் பூஜை செய்யுங்கள் என்று அத்தனை முறை வலியுறுத்தப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த 1 செங்கலை எப்படியாவது பணம் கொடுத்து வாங்கி விட்டால் போதும். அதை வைத்து சூப்பராக சொந்த வீடு கட்டி விடலாம்.

வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று அவர்களுடைய வேலையை நல்லபடியாக செய்து விட்டு மீண்டும் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்றால் தலைவாசல் பராமரிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். தலைவாசல் பராமரிப்பு உங்கள் தலைமுறையை காக்கும். ஆகவே எல்லோரும் தலை வாசலை சரியான முறையில் பராமரித்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற வேண்டுதலை அந்த இறைவனிடம் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -