கணவனிடம் சண்டை போடும் பொழுது மாங்கல்யத்தை கழற்றி எரிவது சரியா? இதனால் தோஷம் ஏதும் ஏற்படுமா?

mangalyam-couple-fight
- Advertisement -

இவ்வுலகில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு கொடுக்க வல்லது. கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு சில மனைவிகள் ஆத்திரத்திலும், கோபத்திலும் புத்தி மழுங்கி போய் கட்டிய மாங்கல்யத்தை தூக்கி எறிந்து விடுவது உண்டு. இது போல இன்றைய தலைமுறையினர் அதிகம் செய்து வருகின்றனர். இப்படி செய்வது சரியா? தவறா? இதனால் தோஷம் ஏதும் ஏற்படுமா? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஊர் கூட்டி நாள், நட்சத்திரம் பார்த்து பெரியவர்கள் முன்னிலையில் நடக்கும் திருமண பந்தத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மாங்கல்யம்! இந்த திருமாங்கல்யத்தை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிவது குடும்பத்திற்கு சுபிட்சத்தை கொடுக்கும் என்பார்கள். மாங்கல்ய சரடு அணிந்திருந்தாலும், மஞ்சள் கயிறு அணிந்து இருந்தாலும் மாங்கல்யத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்து இறைவனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதாக ஐதீகம் உண்டு.

- Advertisement -

இத்தகைய புனிதமான பந்தத்திற்கு சாட்சியாக இருக்கக்கூடிய இந்த திருமண திருமாங்கல்யத்தை பெண்கள் ஒருபொழுதும் தூக்கி எரிந்து தங்களுடைய ஆத்திரத்தை காண்பிக்க கூடாது என்கிறது சாஸ்திரங்கள். பெண்கள் பூமாதேவியை போல பொறுமையானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இத்தகைய பெண்கள் தங்களுக்குரிய நியாயத்தை வேறு வகையில் பெறலாமே ஒழிய, இது போல மாங்கல்யத்தை கழற்றி வீசி தான் கோபத்தை காண்பிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

கட்டிய மணவாளன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் கட்டிய மாங்கல்யத்தை தூக்கி எறிந்தால் அது அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அந்த குடும்பத்திற்கு தீராத தோஷத்தை ஏற்படுத்துவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. தெரிந்தும், தெரியாமலும் செய்யும் இச்செயலானது அசுப பலன்களை கொடுக்கக் கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஜாதகத்தில் எட்டாம் ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அதிபதியானவர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் இது போன்ற பாவ செயல்களை பெண்களுக்கு செய்ய தூண்டுவதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது. ஜாதகத்தில் எட்டு, ஏழு, குடும்பஸ்தானம் ஆகிய இரண்டு ஆகிய இடங்கள் சரியாக அமையவில்லை என்றால், குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும். இதனால் திருமாங்கல்யம் ஆனது அவள் கழுத்தை விட்டு நீங்கும் என்பது ஜோதிட கணக்காக இருக்கிறது. இதற்கு இடம் கொடுக்காமல் பெண்கள் சற்று தங்களை ஆசுவாசப்படுத்தி அமைதியாக இருப்பது ரொம்பவே நல்லது.

சிலருடைய ஜாதகத்தில் தோஷம் இருக்கும். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய மாங்கல்யத்தை உண்டியலில் போடுமாறு பரிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும். இப்பதிகாரத்தை நிறைவேற்ற தவறியவர்களுக்கும், இது போல நடப்பது உண்டு. எனவே தோஷம் உள்ளவர்கள் திருமாங்கல்யத்தை முறைப்படி சேர்க்க வேண்டும். புதிய தாலியை கணவன் கையால் மனைவி ஆனவள் அணிந்து கொண்டு, பழைய தாலியை கழற்றி உண்டியலில் போட்டுவிட்டு வந்தால் இத்தகைய பிரச்சினைகள் நிகழாது தடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
16 கிராம்பு இருந்தால் வராத பணமும் வசூல் ஆகும், கொடுக்க வேண்டிய பணமும் நீங்கள் கொடுத்து கடனை அடைத்து விடலாம் தெரியுமா?

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் குறைய ஆரம்பிக்கும் எனவே தோஷமுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கோபம் என்பது மனிதனின் குணநலன்களில் மிகவும் மோசமானது. உங்களுடைய கோபத்தை நீங்கள் அடக்கி ஆள கற்றுக் கொண்டாலே, அமைதி உங்களை தேடி தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். அதனை விடுத்து சரிக்கு சமமாக போட்டிக்கு போட்டியாக கணவனும், மனைவியும் இணைந்து சண்டை போடுவதால் குடும்பம் தான் உடையுமே தவிர, பிரச்சினைகள் தீர்வதில்லை.

- Advertisement -