பூஜை அறையில் தாமரையை இப்படி வைத்து வேண்டினால், என்ன வரம் கேட்டாலும் உடனே கிடைக்கும். வீடு சுபிட்சம் அடைய இது ஒரு சுலபமான வழிபாடு.

thamarai
- Advertisement -

நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷம் நிலையாக இருக்க, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க, தன தானியத்திற்கு வீட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருக்க, வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ, அந்த இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு கட்டாயம் தேவை. வீட்டில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் உறவுகளுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் இந்த எல்லா வரங்களையும் இறைவன் நமக்கு முழுமையாக கொடுத்து விட்டால் வாழ்வில் கஷ்டம் என்பதே இருக்காது அல்லவா.

ஆனால் சந்தோஷத்தை மட்டுமே அனுபவத்தில் இருந்தால், அந்த சந்தோஷத்தில் என்ன இன்பம் இருக்கிறது என்பதை நம்மால் உணர முடியாது. துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைக்காமல், துன்பம் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற மனப்பக்குவத்தோடு வாழ்வதுதானே நல்லது. சரி, நமக்கு கஷ்டம் வரும் நேரத்தில் மட்டும் இறைவனை வழிபாடு செய்யக்கூடாது. சந்தோஷமாக இருக்கும்போது அந்த இறைவனுக்கு சிறிய நன்றியை சொல்லி சந்தோஷத்தை இறைவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

வீடு சுபிட்சம் பெற தாமரைப்பூவை பூஜை அறையில் எப்படி வைத்து வழிபாடு செய்வது. வெள்ளிக்கிழமை பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு விட வேண்டும். அதன் பின்பு காலை 6 மணிக்கு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு அந்த பச்சரிசிக்கு மேலே தாமரைப்பூவை வைத்து விட வேண்டும்.

இந்த கிண்ணத்தை அப்படியே மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். இந்த கிண்ணத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து விட்டு, குங்குமத்தால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யவேண்டும். ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி!’ என்ற மந்திரத்தை சொல்லி குங்கும அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள். 21 முறை 108 முறை உங்கள் விருப்பம்போல மந்திரத்தை உச்சரிக்கலாம். கணக்கு என்பது ஒரு பிரச்சனை கிடையாது.

- Advertisement -

அர்ச்சனையை முடித்துவிட்டு மகாலட்சுமிக்கு தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். கட்டாயமாக வெள்ளிக்கிழமை அன்று இறைவனுக்கு நைவேத்தியமாக ஒரு டம்பளர் இனிப்பான பசும்பாலை வையுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களால் என்ன நிவேதனம் வைக்க முடியுமோ, ஒரு பழமாவது வைத்து பூஜை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (அர்ச்சனை செய்த குங்குமத்தை தினம்தோறும் பெண்கள் நெற்றியில் இட்டு வர வேண்டும்.)

தாமரைப் பூ வாடிய பின்பு எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். அந்த பச்சரிசியை அப்படியே அடுத்த வாரம் பூஜைக்கு பயன் படுத்த எடுத்து மூடி வைத்துக் கொள்ளலாம். இதேபோல தொடர்ந்து 5 வார வெள்ளிக்கிழமை தாமரை பூவை வைத்து வீட்டில் வழிபாடு செய்தால் செல்வ கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும். வீட்டை பிடித்த பீடை விலகும். ஆனாலும் நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப சின்ன சின்ன கஷ்டங்கள் வரத்தான் செய்யும். ஆனால் கஷ்டங்களின் மூலம் உங்களுடைய குடும்பத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் அந்த தாயார் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -