இந்த ஒரு படத்தை தினமும் பார்த்தால் விவாகரத்து எண்ணம் உள்ளவர்களுக்கு கூட அந்த எண்ணம் மாறி அன்னோன்யம் உண்டாகும் தெரியுமா? பிரிவின் முடிவை மாற்ற செய்ய வேண்டியது என்ன?

uma-maheswarar
- Advertisement -

‘கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று கூறுவார்கள். இந்த ஆயிரம் காலத்து பயிரை ஒரே நாளில் அறுவடை செய்வது போல, விவாகரத்து கோருவது பல பேரை சங்கடப்படுத்தும். ஊர் பெரியவர்கள் மத்தியில், உற்றார் உறவினர்களோடு, சொந்த பந்தங்களோடு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ரொம்ப சுலபமாக பிரிந்து விடுவதில் இன்றைய காலத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். சிறு சண்டை, சச்சரவுகளுக்கு கூட விவாகரத்தை தேடி செல்லும் தம்பதிகள் இந்த ஒரு படத்தை தினமும் பார்த்து வந்தால் உங்களுக்கு அந்த எண்ணமே வராது! பிரிவை நோக்கிய பயணத்தில் உங்கள் முடிவை மாற்ற செய்ய வேண்டிய விஷயம் என்ன? என்பதைத் தான் ஆன்மீக தகவலாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உமையவளும், மகேஸ்வரனும் சேர்ந்து இருக்கும் இந்த காட்சி அமையப் பெற்றுள்ள படம் ஒன்றை வாங்கி வீட்டில் பெரிதாக மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் ஆணோ, பெண்ணோ பார்த்து வந்தால் அவர்களுடைய துணையாரை எப்பொழுதும் நீங்க கூடாது என்கிற எண்ணம் தானாகவே மனதில் பிறக்க துவங்கும். எவ்வளவு சண்டை, சச்சரவுகள் வந்தாலும், துன்பங்கள் நேர்ந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டு பிரிய கூடாது என்கிற எண்ணத்தை உருவாக்குகிற இந்த ஒரு படம் வீட்டில் வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை உச்சரித்து தினமும் வழிபட்டு வந்தால் பிரிவை நோக்கிய பயணத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விலகி மீண்டும் ஒன்றிணைந்து பரஸ்பர அன்னோன்யமாக வாழ்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

உமா மகேஸ்வர மந்திரம்:
நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்!
நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

இம்மந்திரத்தின் பொருள்:
இளம் வயதோடு ஒருவரோடு ஒருவராக சேர்ந்து பரஸ்பர ஒற்றுமையுடன் சிவசக்தி ஸ்வரூபமாக மலை மகளோடு, ரிஷப கொடியோடு, காட்சி தரும் சங்கரனுக்கும் பார்வதி அம்மையாருக்கும் நமஸ்காரம் என்பது பொருளாகும். இவர்களை வணங்கி விட்டு நாம் கேட்கும் வரத்தை கேட்டால் கேட்டபடி மறுக்காமல் அப்படியே கொடுப்பார்கள்.

- Advertisement -

தம்பதியினராகவோ அல்லது தனியாகவோ இந்த படத்திற்கு பூஜை செய்து வழிபடலாம். நைவத்தியம் படைக்க சுத்த தயிர் சாதத்தை படையல் போடுங்கள். நன்கு கெட்டியான தயிர் ஊற்றி அதில் பழங்கள் நறுக்கி எல்லாம் போட்டு, இஞ்சி, மிளகாய் எல்லாம் சேர்த்து தாளித்து சுடச்சுட வாழை இலையில் வைத்து பரிமாற வேண்டும். பின்னர் சிவனுக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சித்து இந்த ஸ்தோத்திரத்தை உச்சரித்து பிரிவு என்னும் எண்ணம் இனி நமக்குள் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தில் இருக்கும் உமா மகேஸ்வரனை போல நீயும், நானும் 100 வருடம் சேர்ந்து வாழ வேண்டும். புரிதல் இன்றி பிரிதலை நோக்கி பயணிப்பவர்கள் மத்தியில் புரிந்து கொள்ள இனி முயற்சி செய்வேன் என்றும் வாக்குறுதி கொடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு உறவிற்கும் பிரிவு என்பது மிகுந்த வலியை கொடுக்கக் கூடியது. வேறு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் அது எப்படி இருக்கும்? என்று தெரியாத பட்சத்தில் எந்த நம்பிக்கையில் நீங்கள் இந்த முடிவை எடுக்க துணிந்தீர்கள்? என்பதை சிந்திக்க வேண்டும். சண்டை வரும் போது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று வேறொரு அமைதியான சமயத்தில் அவர்களுக்கு புரிய முயற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தாலே பாதி பிரிவிற்கு வழியே இல்லாமல் இருக்கும்.

- Advertisement -