வாழ்க்கையில் இருக்கும் எல்லா கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் சக்தி இந்த 1 பூவுக்கு உண்டு. அது எந்த பூ? இறைவனுக்கு முறையாக அந்த பூவை எப்படி சூட்டி வழிபாடு செய்வது?

god
- Advertisement -

மனிதர்களாக பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் பல விதமாக இருக்கத்தான் செய்கிறது. உங்களுடைய வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் சரி, அந்த பிரச்சினைகளை சரி செய்துகொள்ள இறைவனுக்கு நீங்கள் இந்த ஒரு பூவைச் சூட்டி வழிபாடு செய்து வந்தாலே போதும். அத்தனை பிரச்சினைகளுக்கும் சீக்கிரமே விடிவு காலம் பிறந்து விடும். இறைவனுக்கு நாம் சூட்ட வேண்டிய அந்த பூ, என்ன பூ? அந்த பூவினை எந்தெந்த கிழமைகளில், எந்தந்த தெய்வங்களுக்கு சூட்டி வழிபாடு செய்தால், எந்தெந்த பலனை பெற முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

thanga-arali

நாம் எல்லோருக்கும் தெரிந்த பூ தாங்க இந்த பூ. தங்க அரளி பூ. இந்தப் பூவில் இரண்டு வகை உண்டு. ‘ தங்க அரளி’ என்று சொல்லும் பூவும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். ‘பொன் அரளி’ என்று சொல்லும் பூவும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். நமக்கு தேவையானது தங்க அரளி பூ மட்டுமே. கிராமப்புறங்களில் நீளமாக இருக்கும் இலைகள் கொண்ட செடியில் பூக்கும் பூ தான் தங்க அரளி பூ. இந்த செடியிலிருந்து பூக்கும் காய் மிக மிக விஷத்தன்மை கொண்டது. அரளி காயை அரைத்து குடித்து விட்டால் உயிர் பிரிந்து விடும் என்று சொல்லுவார்கள் அல்லவா, அந்த செடியில் இருந்து கிடைக்கும் பூ தான் தங்க அரளி பூ. இந்தப் பூ தான் நமக்கு பூஜைக்கு தேவைப்படும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை தங்க அரளியை சிவபெருமானுக்கு சூட்டி வழிபாடு செய்து வந்தோம் என்றால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

shivan

திங்கட்கிழமை அன்று அம்மனுக்கு தங்க அரளி பூவை சூட்டி வழிபாடு செய்து வந்தால் சுபகாரியத் தடை விலகும். இந்த தங்க அரளிப்பூவை மாலையாக கட்டியம் இறைவனுக்கு போடலாம். அப்படி இல்லை என்றால் உதிரி பூக்களைக் கொண்டு சுவாமிக்கும் அர்ச்சனையும் செய்யலாம். அது நம்முடைய இஷ்டம்தான்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை தங்க அரளி பூவை முருகப்பெருமானுக்கு போட்டு வழிபாடு செய்து வர எதிரி தொல்லைகள் குறையும். குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள், திருமண தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். செவ்வாய்க்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரம் வந்தால் மட்டும் அன்று தங்க அரளி பூவை முருகப்பெருமானுக்கு சாத்த வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

perumal1

புதன்கிழமை தங்க அரளி பூவை பெருமாள், கிருஷ்ணர், ராமர் இப்படி விஷ்ணு அவதாரங்களில் யாருக்கு வேண்டுமென்றாலும் இந்தப் பூவை சூட்டலாம். வீட்டில் குழந்தைகள் புத்தி கூர்மையாக, சிறப்பாக படிப்பதற்கு இந்த வழிபாடு சிறந்தது.

- Advertisement -

guru thangam

வியாழக்கிழமை இந்த தங்க அரளி பூவை குருபகவானுக்கு சூட்டி வழிபாடு செய்தால், வீட்டில் அடமானம் வைத்த நகையை சீக்கிரமே திரும்பவும் மீட்கலாம். உங்கள் வீட்டில் தங்கம் மேலும் மேலும் சேரும். வீட்டில் ஐஸ்வர்யமும் சுபிட்சமும் நிலைத்திருக்கும்.

வெள்ளிக்கிழமை நவக்கிரகங்களில் உள்ள சுக்கிர பகவானுக்கு தங்க அரளி பூவை சூடினால் வாழ்க்கையில் இருக்கும் பணக் கஷ்டங்கள் தீரும். தேவைக்கு ஏற்ப வருமானம் வந்துகொண்டே இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது.

சனிக்கிழமையில் இந்த தங்க அரளி பூவை சனி பகவானுக்கும், பைரவருக்கு சூட்டி வழிபாடு செய்து வர, சனி பகவானால் உண்டாகும் தோஷங்கள் விலகும். கடன் தொல்லை குறையும். ஏழரை சனி அஷ்டமத்து சனி நடந்து கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை அனுபவித்து வருவார்கள் அல்லவா. இவர்கள் சனிக்கிழமையில் இந்த வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

bairavar

இப்படி உங்களுடைய வாழ்க்கையில் எந்த கஷ்டம் இருந்தாலும் சரி, அந்த கஷ்டங்களுக்கு கூடிய சீக்கிரமே விமோசனம் கிடைக்க, இந்த தங்க அரளி பூவை இறைவனுக்கு உதிரி புஷ்பங்கள் ஆக கொடுத்தோ, அல்லது மாலையாக தொடுத்து அணிவித்தோ பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

praying-god1

உங்களுடைய வீட்டின் அருகில் இந்த தெய்வங்களின் கோவில்கள் இருந்தால், அந்த கோவில்களுக்கு சென்று தங்க அரளி பூவை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்து கொள்ளலாம். கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய தெய்வங்களுக்கும் இந்த தங்க அரளி பூவை சூட்டி உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைக்கலாம் என்ற கருத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -