இந்த எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வாருங்கள். தங்கம் உங்கள் வீட்டில் அதிகம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

jwelle
- Advertisement -

தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர் என்று எவருமில்லை. அளவுக்கதிகமான ஆசை இல்லாவிட்டாலும் காதிலும் கழுத்திலுமாவது தங்க நகை அணிய வேண்டும் என்ற சிறிய ஆசையாவது இருக்கதான் செய்யும். தங்கம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே ஒரு வீட்டில் குண்டு மணி அளவு தங்கமாவது எப்போதும் இருக்க வேண்டும். சிறிதளவு தங்கம் கூட வீட்டில் இல்லை என்றால் அந்த வீட்டிலுள்ளவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதாக அர்த்தமாகும். அந்த தோஷத்தினை உடனடியாக நிவர்த்தி செய்தால் மட்டுமே உங்களிடம் செல்வம் வந்து சேரும். இதற்கான எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

gold3

தங்கம் என்பது செல்வத்தையும், வசதி வாய்ப்பையும் தருகின்ற ஒரு ஆபரணப் பொருள் மட்டுமல்ல. தங்கத்தினை கடவுளாக பாவித்து அதனை பொக்கிஷம் போல் பார்ப்பவர்களிடம் அளவுக்கதிகமான செல்வங்கள் வந்தடையும். ஆனால் தங்கத்தை வெறும் ஆபரண பொருளாக மட்டும் பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஆசைப்படும் சிறிய தங்க நகையை கூட வாங்குவது என்பது முடியாத ஒன்றாக இருக்கும்.

- Advertisement -

தங்கம் சேர பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
மகாலக்ஷ்மியை எப்பொழுதும் தன்னுடைய மார்பினுடனே வைத்திருக்கும் பெருமாளை சனிக்கிழமை தோறும் கோவிலுக்குச் சென்று பூஜித்து வருவதால் மகாலட்சுமியின் அருள் முழுவதுமாக கிடைத்து வீடுகளில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.

perumal

கோவிலில் பெருமாளின் மீது சார்த்தப்பட்டிருக்கும் மாலையிலிருந்து கொடுக்கப்படும் துளசியை எடுத்து வந்து உங்கள் வீட்டில் உள்ள நகைகளின் மீது வைத்து பூஜை செய்வதால் தங்கம் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒரு செம்பினுள் பன்னீர், நசுக்கிய ஏலக்காய், மஞ்சள் தூள், பச்சைகற்பூரம் போன்றவற்றை கலந்து விட்டு, அதனுள் நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு தங்க நகையினை போட்டு, அதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் அதனை நீங்கள் தங்கம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு இந்த பூஜையை மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்துவர நீங்கள் எதிர்பாராத அளவிற்கு தங்கம் உங்களிடம் சேரும்.

sembu-sombu

தங்க நகைகளை இரும்பு அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைக்காமல் ஒரு மரப்பெட்டியில் சிகப்பு துணி விரித்து அதனுள் தங்க நகைகளை வைத்து வந்தால் வீட்டில் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒரு சிறிய சிவப்பு துணியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளசி இவை மூன்றையும் ஒரு மூட்டையாக கட்டி நீங்கள் நகை வைக்கும் மரப்பெட்டியில் வைத்து வந்தால் தங்க நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

Thulasi

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ள தங்கத்தின் மீது சிறிதளவு துளசியை வைத்து வந்தால் தங்கம் என்றென்றுமே குறையாமல் இருக்கும்.

கோவில்களில் கடவுளுக்கான அபிஷேகங்கள் நடக்கும் பொழுது உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு தங்க பொருளை அபிஷேக நீரில் சேர்த்து கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைத்தது அந்த தங்கம் உங்களுக்கு பல மடங்காக உயரும்.

abishegam

இவ்வாறான வழிமுறைகளை நீங்கள் பின்பற்றி வந்தால் வியக்கத்தக்க அளவிற்கு தங்கம் உங்களிடம் வந்தடையும்.

- Advertisement -