வீட்டில் தங்கம் பெருகிக் கொண்டே செல்ல தங்கத்தை சுவாமி படங்களுக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

woman-with-gold

தங்கம் விற்கும் விலைக்கு தங்கம் வாங்குவது என்பது மிகவும் அரிதாகி போய்விட்டது. தங்கத்தின் மீது பிரியம் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தங்கத்தை பெரிதான நினைப்பவர்கள் உங்கள் வீட்டில் தங்கம் மென்மேலும் பெருக உங்களிடமிருக்கும் தங்க நகைகளை வைத்து சுவாமி படங்களுக்கு இதை செய்யுங்கள். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பொன்னாபரணங்கள் வெறும் நகைகள் மட்டுமல்ல, அது உங்கள் செல்வமாகும். நம்மிடம் இருக்கும் செல்வம் மகாலட்சுமிக்கு இணையானது ஆகும். குண்டுமணி அளவாவது வீட்டில் தங்கம் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர். எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஒரு வீட்டில் குண்டுமணி தங்கம் இருந்தால் போதும் மகாலட்சுமி அங்கு வாசம் செய்வாள்.

அப்படி நம்மிடம் இருக்கும் தங்க நகைகளுக்கு கூட தோஷம் உண்டு. நாம் அணிந்து கொண்டிருக்கும் தங்க நகைகளை சுவாமி படங்களுக்கு அணிவிக்கலாமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். கோவில் கும்பாபிஷேகங்களில், பூஜைகள் செய்யும் பொழுதும் கலசத்திற்கு தங்க, வைர நகைகளை போடச் சொல்வது வழக்கம். பக்தர்களிடம் வாங்கிய தங்க நகைகளை கலசத்தில் போட்டு தெய்வத்திற்கு காண்பித்து விட்டு பின்னர் அவர்களிடமே கொடுப்பதை நாம் கவனித்து இருப்போம்.

gold-pot

இப்படி நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் இறைவன் திருவடியில் சென்று வரும் பொழுது மென்மேலும் நமக்கு தங்க நகைகள் பெருகும் என்பது நம்பிக்கை. அப்படி நாம் செய்யும் பொழுது தோஷம் நீக்க அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? தங்க தோஷம் நீங்க கலசத்திற்குள் தண்ணீருடன் பன்னீர் சேர்த்து, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் போடுவார்கள். பன்னீரும், மஞ்சளும் சேர்ந்த இக்கலவையில் தங்கத்தை போடும் பொழுது தங்க தோஷம் நீங்குவதாக ஐதீகம் உண்டு. எனவே நாம் ஏற்கனவே அணிந்திருந்தாலும் அந்த நகைகள் தோஷம் நீக்கப்பட்டதால் இறைவனுக்கு கொடுக்கப்படுகிறது.

தோஷம் நீங்காமல் தங்கத்தை அணிய அல்லது அணிவிக்க கூடாது. நீங்கள் இரவலாக கொடுக்கும் தங்க நகைகளில் கூட தோஷம் உண்டாகும். ஒருவர் போட்டுக் கொண்டபின் இன்னொருவர் அதை அப்படியே போட்டு கொள்ள கூடாது. தோஷத்தை நீக்கி விட்டு பின்பு தான் அதனை அணிவித்து கொள்ள வேண்டும். நாம் தங்க நகைகளை அணிந்து இருக்கும் பொழுது நம் உடலில் இருந்து வரும் வியர்வை துளிகள் நகைகளில் சேர்ந்து தோஷத்தை உண்டாக்குகிறது. எனவே தங்க நகைகளுக்கு இது போல தண்ணீரில் சிறிதளவு பன்னீரும், கஸ்தூரி மஞ்சளும் கலந்து அதில் நகைகளை போட்டு எடுத்து மீண்டும் பயன்படுத்துவது நல்லது.

gold3

இதே முறையில் நம் வீட்டில் பூஜை செய்யும் பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் சுவாமி படங்களுக்கு தங்க நகைகளை அணிவிக்க தங்கம் மென்மேலும் பெருகும். சிறிய கலசத்தில் உங்களிடம் இருக்கும் சிறிய வகையான நகைகளை இதே போல செய்து வைத்தும் போட்டு வைக்கலாம். படங்களுக்கு அணிவிக்க நினைப்பவர்கள் தோஷத்தை நீக்கிய பின்பு தாராளமாக சுவாமி படங்களுக்கு ஆரம், ஜெயின் போன்றவற்றை போட்டு பூஜைகள் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் பன்மடங்கு பெருகும் என்கிற நம்பிக்கை உண்டு.