இந்த தவறுகளை நீங்கள் செய்பவர்களாக இருந்தால், தங்கம் உங்கள் வீட்டில் நிச்சயமாக தங்காது.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

கஷ்டப்பட்டு வயிற்றை கட்டி வாயை கட்டி சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து, சீட்டு போட்டு அழகாக ஒரு தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்போம். ஆனால் அந்த தங்க நகையை போட்டு அழகு பார்ப்பதற்குள், நகை அடகு கடைக்கு சென்று விடும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆசையாக வாங்கிய தங்க நகையை அனுபவிக்காமலேயே அடகு வைக்கும் போது, அவர்களுடைய மனது படும் பாடு அந்த பெண்ணுக்கு மட்டும்தான் தெரியும். இப்படி ஒரு வீட்டில் தங்கம் தங்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில காரணங்களை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தங்கம் தங்காமல் போவதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளது. அந்த தங்கத்தை நம்மிடம் தங்க வைப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும். ஆன்மீக ரீதியாக சில குறிப்புகள் உங்களுக்காக.

முதலில் தங்கம் தங்காமல் போவதற்கு உண்டான காரணத்தை நாம் தெரிந்து கொள்வோம். தங்கம் என்பது நம் வீட்டின் ஐஸ்வர்யத்தை குறிக்கக்கூடிய ஒரு பொருள். இந்த தங்க நகைகளை எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய வாயில் வைத்துக் கடிக்க கூடாது. அதாவது நாம் அணிந்திருக்கும் தங்க நகைகளில் எச்சில் பண்ணக்கூடாது. சில பேர் தங்க நகைகளில் ஊக்கு அழுத்தமாக இல்லை என்று வாயில் வைத்து கடிப்பார்கள். இந்தத் தவறை நீங்கள் செய்பவர்களாக இருந்தால் அதை திருத்தி பாருங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக நம்முடைய நகைகளை அனாவசியமாக அடுத்தவர்களுடைய கையில் கொடுக்கக் கூடாது. ‘நீங்கள் அணிந்திருக்கும் இந்த நகை அழகாக இருக்கிறதே’ நான் ஒருமுறை பார்த்துவிட்டு தருகிறேன் என்று கேட்டால், நம்முடைய உடம்பில் அணிந்திருக்கும் நகையை உடனடியாக கழட்டி அடுத்தவர்களிடம் கொடுக்கக்கூடாது. இப்படி செய்தாலும் தங்கம் நம்மிடம் தங்காமல் போய்விடும்.

Today Gold rate

சில பேர் நாம் அணிந்திருக்கும் தங்க நகையை பார்த்து இந்த நகை மிக மிக அழகாக உள்ளது, இந்த நகை உங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்றும் சொல்லுவார்கள். அவர்கள் நல்ல எண்ணத்தோடு தான் சொல்லியிருப்பார்கள். அவர்களுடைய மனதில் எந்த கெட்ட எண்ணமும் இருந்திருக்காது. இருப்பினும் அவர்கள் அந்த வார்த்தையை சொன்ன சில நாட்களிலேயே நாம் அணிந்திருந்த தங்க நகை, உடைந்து போகும். சில சமயங்களில் தொலைந்து போகும். சில சமயங்களில் அடகுக்கு சென்றுவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலை உங்களுக்கு வந்தால், அந்த குறிப்பிட்ட தங்க நகையை ஒரு வெள்ளை துணியில் வைத்து விட்டு அதில் ஒரு பிடி அளவு கல்லுப்பு வைத்துவிட்டு, முடிச்சு போட்டு பூஜை அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து விடுங்கள். மறுநாள் காலை, நகையோடு இருக்கும் கல் உப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள். அந்த குறிப்பிட்ட தங்க நகையை உங்கள் வீட்டில் இருக்கும் சுவாமி விக்கிரகங்களுக்கு அல்லது சுவாமி படங்களுக்கு அணைத்துவிட்டு அதன் பின்பு பீரோவில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் அடுத்தவர்களுடைய கண் பார்வையின் மூலம் எந்த தோஷமும் உங்கள் தங்கநகைக்கு ஏற்படாது.

- Advertisement -

தங்கம் உங்களை தேடி வர வேண்டும் என்றால் நீங்கள் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் தங்க நகை பெட்டிகளை ஒரு மஞ்சள் பையில் வைத்து உங்கள் வீட்டு பீரோவில் பத்திரப்படுத்தி வைத்தால் தங்கம் பத்திரமாக உங்களுடனே இருக்கும். மஞ்சள் நிறம் குரு பகவானுக்கு சொந்தமான நிறம் என்பதால் மேலும் தங்கம் சேர்வதற்கான யோகமும் உண்டாகும்.

guru-bagavan

வீட்டில் இருக்கும் பெண்கள் வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற ஆடையை உடுத்திக் கொள்ள வேண்டும். மஞ்சள் நிறப் பூவை வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக வியாழக்கிழமை அன்று குரு பகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு தங்கம் வாங்க கூடிய யோகம் வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

navagraham

உங்களால் முடிந்தால் உங்களிடம் இருக்கும் நகைகளை எடுத்துச் சென்று நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானின் பாதங்களில் வைத்து, வியாழக்கிழமை அன்று அர்ச்சனை செய்து வீட்டிற்கு எடுத்து வரலாம். பத்திரமாக கோவிலுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றால் மட்டும் இதை செய்யுங்கள்.

samanthi

நீங்கள் புதிதாத தங்கம் வாங்க செல்வதாக இருந்தால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்கம் வாங்கச் செல்வது என்பது சுபிட்சத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம். உங்களுடன் உங்கள் குழந்தைகளை கூட்டி செல்லலாம். மற்றபடி மற்ற உறவினர்கள் நண்பர்கள் யாரையும் தங்கம் வாங்கச் செல்லும்போது கூட்டி செல்லாமல் இருப்பது நன்மை தரும்.

samandhi

சொந்த பந்தங்களை குறை சொல்வதற்காக ஒதுக்கி வைப்பதற்காக இப்படி சொல்லவில்லை. சில விஷயங்களில் சில விதி முறைகளை நாம் பின்பற்றினால் நமக்கு நன்மை உண்டாகும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றுங்கள். தங்கம் உங்களிடம் நிரந்தரமாக தங்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -