தஞ்சை கும்பாபிஷேகத்தின் போது நடந்த இந்த அதிசயம் பற்றி தெரியுமா?

thanjai-kudamuzhukku
- Advertisement -

தமிழகத்தில் கட்டிட கலையின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா கோலாகலமாக நேற்று நடைபெற்று முடிந்தது. கோவில் முழுவதும் வண்ண மாயமான விளக்குகளால் அலங்காரம் செய்யபட்டு விழாக் கோலம் பூண்டது. இதில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Thanjai periya kovil

23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பெரும் சர்ச்சைக்கு பிறகு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மந்திரங்கள் ஓதப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேவாரம், திருவாசமும் வாசிக்கபட்டது. தமிழ் மந்திரங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு ஓம் நமச்சிவாய நாமத்துடன் ஒலித்து காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

- Advertisement -

ஒவ்வொரு முறை தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவின் போதும் நிறைவு பெறுவதை உறுதி செய்யும் விதமாக கருட பகவான் அருள் தருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வகையில் இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய யாக கால பூஜைகள் நேற்றைய தினம் ஏழாம் கால பூஜையாக 9.30 மணி அளவில் நடைப்பெற்று நிறைவுப்படுத்தினர். கலசத்தில் ஊற்றப்படும் புனித தீர்த்தங்கள் தங்கள் மேல் படாதா? என்ற பக்தர்களின் அலைமோதல் கட்டுக்கடங்காமல் போனது.

thanjai

பூஜையை நிறைவு செய்யும் விதமாக நேற்றும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவில் கருடபகவான் கலசத்தின் மேல் சுற்றி சுற்றி வந்து வட்டமிட்டதை காணமுடிந்தது. ஆலய நிர்வாகம் சார்பாக இதனை மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

- Advertisement -

garudan

இதனை கண்டு களித்த பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். குடமுழுக்கின் போது கருடாழ்வாரை தரிசனம் செய்ய காண கண்கோடி வேண்டுமல்லவா? முழுமையாக குடமுழுக்கு விழா எந்தக் குறையுமின்றி மிகச்சிறப்பாக நடந்தேறியதற்காக மற்றும் இறையருள் முழுமையாக இறங்கியதற்கான ஒரு சான்றாக தான் கருடாழ்வார் குடமுழுக்கு பூஜையின் போது வட்டம் இடுவது என்பது. எந்த கோவிலாக இருந்தாலும் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிடுவது இறை சக்தி இறங்குவதை உணர்த்துவதாக கூறப்படுகிறது. இதனால் தஞ்சையில் நேற்றைய தினம் பக்தர்கள் உள்ளம் பூரித்தது.

இதையும் படிக்கலாமே
பிரியாணி இலையை எரித்தால் என்ன அதிசயம் நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thanjavur kumbabishekam 2020. Thanjavur periya kovil kumbabishekam 2020. Thanjavur kumbabishekam 2020 tamil. Thanjai periya kovil kudamuluku in Tamil.

- Advertisement -