இவ்வளவு சீக்கிரத்துல இந்த தண்ணி பாலில் கூட இப்படி கெட்டியான தயிர் கிடைக்குமா?. ஆமாங்க எவ்வளவு தண்ணி பாலாக இருந்தாலும் அத சீக்கிரம் கெட்டி செய்ற மாத்திட முடியும். இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்.

- Advertisement -

பாலை உறை ஊற்றி தயாராக மாற்றி அதை பயன்படுத்துவது நாம் காலம் காலமாக தொடரும் ஒரு நல்ல ஆரோக்கியமான முறை. இந்த பாக்கெட் தயிர் எல்லாம் இப்பொழுது தான் அதிக அளவில் பிரபலமாகிவிட்டது. முன்பெல்லாம் தயிர் வேண்டும் என்றால் முதல் நாளே பாலை காய்ச்சி அதில் உறை ஊற்றி 8 மணி நேரத்திற்கு மேல் அந்தப் பாலை அப்படியே வைத்து அதன் பிறகு தான் அது தயிராக நமக்கு கிடைக்கும். ஆனால் இதே பழைய காலத்து முறையிலே ஆனால் தண்ணி பாலிலும் கூட கெட்டித் தயிர் 3 மணி நேரத்திலே கிடைத்து விடும் என்பது கொஞ்சம் ஆச்சரியமான தகவல் தான். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து இந்த பாலை காய்ச்ச ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் நீங்கள் ஊற்றும் பால் அந்த பாத்திரத்தில் அடிபிடிக்காமல் இருப்பதற்காக இதை நீங்கள் சாதாரணமாக எப்போது பாலை காய்ச்சினாலும் இந்த முறை பின்பற்றுங்கள் இது ஒரு சின்ன டிப்ஸ்.

- Advertisement -

இப்பொழுது தண்ணீர் சேர்த்து அந்த பாத்திரத்தில் உங்களிடம் இருக்கும் தண்ணீர் பாலை ஊற்றி விடுங்கள். பால் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் பாலை கொதிக்க வைத்து விடுங்கள். அப்பொழுது கொஞ்சம் கலந்து விடுங்கள், இல்லையென்றால் பாலில் ஆடை கட்டி விடும். அதனால் நன்றாக பாலை கலந்து விட்டு பத்து நிமிடம் பாலை கொதிக்க விடுங்கள். இப்பொழுது ஒரு சிறிய கிண்ணத்தில் அரை லிட்டர் பாலுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சோள மாவு எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளுங்கள். அந்த சோள மாவு கரைச்சலை கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். (இந்த சோள மாவு ஊற்றாமலும் இந்த தண்ணி பால் தயிராக கிடைக்கும் சோள மாவு சேர்க்கும் பொழுது இன்னும் அதிக கெட்டித் தன்மையாக இருக்கும் வேண்டாம் என்றால் இந்த ஒரு ஸ்டெப்பை மட்டும் விட்டு விடுங்கள்).

பாலை காய்ச்சிய பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்திற்கு பாலை மாற்றிக் கொள்ளுங்கள். எப்பொழுதுமே பால் காய்ச்சிய பாத்திரத்தில் உரை உற்றக் கூடாது. எந்த பாத்திரத்தில் காய்ச்சினாலும் தயிர் ஊற்ற இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றி தான் ஊற்ற வேண்டும் இதுவும் ஒரு டிப்ஸ்.

- Advertisement -

பால் கொஞ்சம் வெதுவெதுப்பாக ஆறிய உடன் அதை ஊற்ற உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் சிரட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உட்புறம் நன்றாக சுரண்டி நார் வைத்து தேய்த்து கழுவி காய வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் காய்ச்சி இறக்கிய வெதுவெதுப்பான பாலை தேங்காய் சிரட்டையில் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி சாதாரண ரூம் டெம்பரேச்சர்யில் வைத்து விடுங்கள். மூன்று மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் கெட்டியான தயிர் உங்களுக்கு கிடைத்து விடும். தேங்காய் சிரட்டையானது அந்த பாலில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும் அதனால் உங்களுக்கு கெட்டி தயிர் கிடைக்கும் இந்த தேங்காய் சிரட்டையில் பாலானது சீக்கிரம் புளித்து தயிர் பக்குவத்திற்கு கிடைத்து விடும்.

இதையும் படிக்கலாமே: பசங்க வெள்ளை ஷூவை துவைக்காம சுத்தம் செய்ய முடியுமா? அட இதை எல்லாம் இப்படி செய்து முடிக்கலாமா என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் டிப்ஸ். வாங்க தெஞ்சிக்கலாம்.

உங்களுக்கு மதிய நேர சாப்பாட்டிற்கு தயிர் வேண்டும் என்று நீங்கள் காலையில் முடிவு செய்து உரை ஊற்றி வைத்தால் கூட, மதியத்தில் சுவையான தயிர் கிடைத்து விடும். இந்த குறிப்பு மிகவும் எளிமையான முறை தான் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -