பசங்க வெள்ளை ஷூவை துவைக்காம சுத்தம் செய்ய முடியுமா? அட இதை எல்லாம் இப்படி செய்து முடிக்கலாமா என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் டிப்ஸ். வாங்க தெஞ்சிக்கலாம்.

- Advertisement -

நாளெல்லாம் செய்தாலும் கூட வீட்டு வேலைகளுக்கு ஒரு முடிவே கிடையாது. ஏதாவது ஒன்றை செய்து கொண்டே தான் இருக்க வேண்டும். சில நேரங்களில் இந்த வேலை செய்வதற்கு எரிச்சலாக கூட போய் விடும். தினமும் சுத்தம் செய்து கொண்டே இருந்தால் இந்த எரிச்சல் வருவது இயல்பு தானே. இதில் இருக்கும் சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் தெரிந்து கொண்டால் சில வேலைகளை தினமும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்கள் வீட்டு வேலை டென்ஷனை பாதி அளவிற்கு குறைக்கும் இந்த குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு வாங்கி வைத்த சில நாட்களுக்குள்ளே மேலே முளைத்து ருசி மாறி வீணாகி விடும். உருளைக்கிழங்கு எத்தனை நாள் ஆனாலும் அப்படி ஆகாமல் இருக்க பூண்டை உரித்த பிறகு அந்த பூண்டின் காம்பு இருக்கும் அதை உருளைக்கிழங்கில் போட்டு வைத்து விடுங்கள். எத்தனை நாள் ஆனாலும் முளைக்கவும் செய்யாது உருளைக்கிழங்கு ஃப்ரஷ் ஆகவும் இருக்கும்.

- Advertisement -

குக்கரில் பயிறு வகைகளை வேக வைத்த பிறகு அதை வடிகட்ட, ஒரு வடிஜல்லி அதன் பிறகு ஒரு பாத்திரம் என்று பயிர் வேக வைத்தாலே இரண்டு, மூன்று பாத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கும். இனி அது போல இல்லாமல் பயிறு வேக வைத்த பிறகு குக்கர் கேஸ் கட்டை எடுத்து விட்டு மறுபடியும் குக்கரை மூடி அப்படியே சாய்த்து விட்டால் போதும் கேஸ் கட் இருந்து இடத்தில் இருக்கும் கேப்பில் மொத்த தண்ணீரும் வெளியில் வந்து விடும். இரண்டு, மூன்று பாத்திரம் என்று வேலையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

சாப்பிட்டு முடித்த பிறகு வேண்டாம் என தூக்கி கீழே போடும் இந்த வாழைப்பழத் தோலை வைத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஷூவை அழகாக பாலிஷ் போட்டு விடலாம். இதில் பாலிஷ் போடும் போது நல்ல பளபளப்பாக புதுசு போல மாறி விடும் பாலிஷ் வாங்க வேண்டிய செலவும் இல்லை.

- Advertisement -

அத்துடன் இந்த ஷூவை கழட்டி வைக்கும் போது இதற்குள் பூச்சி வண்டுகள் ஏதும் சென்று விடுமோ என்ற பயம் இனி உங்களுக்கு தேவையில்லை. இரவில் கழட்டி வைக்கும் போது ஒரே ஒரு பூண்டை லேசாக தட்டி உள்ளே போட்டு விடுங்கள். இந்த வாடைக்கு எந்த பூச்சும் வராது. அடுத்த முறை எந்த பயமும் இல்லாமல் அணிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் நீங்கள் வேண்டாம் என தூக்கி போடும் இந்த ஒரு பொருள் போதும் உங்கள் பழைய தோசை கல்லை புதிதாக மாற்றவும், புதிய தோசை கல்லை பழக்கவும் இதை விட ஒரு எளிமையான வழி இருக்க வாய்ப்பே இல்லை. அப்புறம் என்ன நல்ல மொறு மொறுப்பான தோசையை ஊற்ற வேண்டியது தானே.

குழந்தைகள் அணியும் இந்த வெள்ளை ஷூவை துவைப்பது போல கடினமான வேலை எதுவும் இல்லை. இதை அடிக்கடி துவைக்கவும் முடியாது. இந்த சுவை சுத்தம் செய்ய நீங்கள் பயன்படுத்தும் எந்த பேஸ்ட்டாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள், அத்துடன் அரை டீஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடா இரண்டையும் ஷூவின் மீது நன்றாக தேய்த்து விட்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து துடைத்து பாருங்கள். அழுக்கு  இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். ஷூ புதிது போல் பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -