பாரம்பரியமான முறையில் தவல அடை இப்படி தான் செய்யனும். இப்படி மட்டும் செஞ்சிங்கன்னா மேல நல்ல மொறு மொறுன்னு உள்ள பஞ்சு போல சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் போங்க.

thavalai adai
- Advertisement -

நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் இந்த தவல அடைக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் உடனடியாக செய்யக் கூடிய அடை வகைகள் பல வந்து விட்டாலும் இந்த தவல அடைக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த அடையை நம் பாரம்பர முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த அடை செய்வதற்கு முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ரேஷன் பச்சரிசி மாவு பச்சரிசி எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு கால் கப் புழுங்கல் அரிசி, கால் கப் துவரம் பருப்பு, கால் கப் கடலைப் பருப்பு, கால் கப் உளுத்தம் பருப்பு எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த அரிசி பருப்பு அனைத்தையும் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளுங்கள். நான்கு மணி நேரம் கழித்து இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை மைய அரைத்து விடக் கூடாது பிறகு அடை வராது.

அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் மாற்றிய பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கைகளாலே நன்றாக கலந்து மூடி போட்டு இதையும் ஒரு நான்கு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். மாவு ஓரளவிற்கு புளித்து லேசாக நிறைத்து இருந்தால் அடை மாவு சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.

- Advertisement -

இப்போது இந்த அடைக்கு ஒரு தாளிப்பை சேர்த்துக் கொள்வோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான உடன் ஒரு டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் உளுந்து, நான்கு பச்சை மிளகாய் சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கொத்து கறிவேப்பிலை கால் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது அடுப்பில் அடி கனமான கடாய் அல்லது இரும்பு கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கலந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி மாவை மட்டும் எடுத்து இந்த எண்ணெயில் ஊற்றிய பிறகு அடுப்பை லோ ஃபிளேமிற்கு வைத்து தட்டு போட்டு மூடி விட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து ஒரு புறம் நன்றாக சிவந்து வந்த பிறகு மறுபடியும் திருப்பி போட்டு மீண்டும் இரண்டு நிமிடம் கழித்து எடுத்து விட்டால் சூப்பரான மொறு மொறு பாரம்பரிய தவல அடை தயார்.

இதையும் படிக்கலாமே: ஹெல்தியான இந்த கீரை பக்கோடாவை இப்படி டேஸ்ட்டா செஞ்சு கொடுங்க சுடச்சுட தீர்ந்து போகும் எவ்வளவு செஞ்சாலும் பத்தவே பத்தாது.

சுட சுட இந்த அடைக்கு சைடிஷ் ஆக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என எதை வைத்து சாப்பிட்டாலும் சுவை ரொம்பவே பிரமாதமாக இருக்கும். இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போல கூட குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். நல்ல மொறு மொறுன்னு இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -