தீய சக்தியை விரட்டி அடிக்கும் லட்சுமி நரசிம்மர்.

lakshmi narashimmar
- Advertisement -

வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய தரப்பில் பல முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைந்து விட்டால் அனைவருமே கோடீஸ்வரராக தான் திகழ வேண்டும். ஆனால் முயற்சி செய்பவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களின் முயற்சிகளின் வெற்றி அமைகிறது. அதோடு மட்டுமல்லாமல் தீய சக்திகளின் விளைவாலும் முயற்சிகள் தடைப்பட்டு விடுகின்றன. அப்படி தீய சக்திகளின் பாதிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கர்ம வினைகளின் அடிப்படையில் ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அந்த கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பரிகாரம் செய்தால்தான் அந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும். ஆனால் தீய சக்திகளால் ஒருவருக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது என்னும் பட்சத்தில் அந்த தீய சக்திகளை அகற்றினாலே நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும். அப்படி தீய சக்திகளை விரட்டி அடிக்க கூடிய மிகவும் அதிசக்தி வாய்ந்த தெய்வமாக தான் லக்ஷ்மி நரசிம்மர் விளங்குகிறார்.

- Advertisement -

லக்ஷ்மி நரசிம்மரை உக்கிர தெய்வமாக நாம் நினைக்க காரணம் அவர் எதிரிகளை ஒழித்துக் கட்டும் ஆற்றலால் தான். ஆனால் யார் ஒருவர் முழு மனதோடு அன்போடு அவரை வணங்கினாலும் அவருடைய பக்தருக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காமல் அவரை காத்து ரட்சிக்கும் அற்புதமான தெய்வமாக லட்சுமி நரசிம்மர் திகழ்கிறார். இவரிடம் நாம் எந்த கோரிக்கையை வைத்தாலும் அந்த கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மரை தீய சக்திகள் விலகுவதற்கு எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் மேற்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிப்பாடாக தான் இந்த வழிபாடு திகழ்கிறது. இதற்காக நாம் ஒரே ஒரு மந்திரத்தை கூறினால் மட்டுமே போதும். எப்பொழுதும் அனைவரின் இல்லங்களிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி தூபம் காட்டும் வழக்கம் இருக்கிறது. அப்படி சாம்பிராணி தூபம் காட்டுவதற்கு முன்பாகவே அதாவது செவ்வாய்க்கிழமை தூபம் காட்டுவதாக இருந்தால் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமை தூபம் காட்டுவதாக இருந்தால் வியாழக்கிழமையும் வீட்டை சுத்தமாக துடைக்க வேண்டும். அவ்வாறு துடைக்கும் பொழுது துடைக்கும் தண்ணீரில் கல் உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வீடு முழுவதும் துடைக்க வேண்டும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்றுதான் இந்த லட்சுமி நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதால் திங்கட்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் விளக்கேற்ற வேண்டும். பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். அப்படி சாம்பிராணி தூபம் போடும் பொழுது “லட்சுமி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம லஷ்மி நரசிம்ம பாஹிமாம்
உக்கிர நரசிம்ம உக்கிர நரசிம்ம உக்கர நரசிம்ம ரக்ஷமாம்”

என்ற நாமத்தை உச்சரித்த வண்ணம் வீடு முழுவதும் தூபம் போட வேண்டும்.

இப்படி போடுவதன் மூலம் அந்த சாம்பிராணி தூபத்தில் உக்கிர நரசிம்மராக எழுந்தருளி வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி அடித்து லட்சுமி நரசிம்மராக நமக்கு அருள் பாலிப்பார்.

இதையும் படிக்கலாமே: மகா பெரியவா ஆசிர்வாதங்களை பெற மந்திரம்

இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி அடித்து நன்மைகளை வாரி வழங்குவார் லஷ்மி நரசிம்மர்.

- Advertisement -