நாளை(10/1/2021) மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம்! சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால் எல்லா கஷ்டமும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா?

sivan-nandhi-pradosham

நாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்துக் கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

jyotirlingam

பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலகட்டத்தை குறிக்கிறது. இன்று அதிகாலை எழுந்து நீராடி, சுத்தமான உடை தரித்து, உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இப்படி விரதம் இருப்பவர்களுக்கு சிவனுடைய அருள் கிடைக்கும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை. உண்மையான பக்தியுடன் சிவபெருமானை நோக்கி பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும். தீராத துன்பங்களும் தொலையும்.

ஒவ்வொரு மாதத்தின் பிரதோஷ வேளையில், அனைத்து சிவன் கோவில்களிலும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் இந்த பிரதோஷ தினத்தில் சிவபெருமானுக்கு அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் யாவும் உடனே நீங்கும் என்பது ஐதீகம். வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும், இந்த வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வதும், அவருக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை நீங்கள் வாங்கிக் கொடுப்பதன் மூலம் நல்ல பலன்களைக் காணலாம்.

பிரதோஷ பூஜையில் நந்தி பகவானுக்கு பச்சரிசி, வெல்லம் கலந்த நிவேதனத்தை படைத்து நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. அருகம்புல், வில்வ இலை மாலை நந்தி பகவானுக்கு உகந்ததாகும். இதனை நந்தி பகவானுக்கு செய்து விட்டு, சோம சூக்தப் பிரதட்சணம் செய்ய வேண்டும். அதாவது மற்ற நாட்களை விட, பிரதோஷ வேளையில் நந்தியை வணங்கி விட்டு அபிஷேகம் செய்யும் நீர் வெளியில் வரும், கோமுக தீர்த்தம் வரை செல்ல வேண்டும்.

- Advertisement -

பின்னர் அங்கிருந்து வணங்கி விட்டு சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை வந்து மீண்டும் கோமுக தீர்த்தத்திற்கு சென்று வணங்க வேண்டும். இப்படி கீழே கொடுக்கபட்டுள்ள படத்தில் உள்ளது போல் மூன்று முறை செய்வது சோமசூக்த பிரதட்சணம் என்று கூறுவார்கள். இதை பிரதோஷ கால வேளையில் செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். இன்றைய நாள் இந்த பூஜைகளில் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு தீராத துன்பங்களையெல்லாம் தீர்த்துக் கொள்ளலாம்.

pradhosa-kala-valam-varum-murai

அபிஷேகத்திற்கு பால், தயிர், தேன், சந்தனம், பழங்கள், மலர்கள், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், எண்ணெய், மலர்கள் என்று உங்களால் முடிந்த பொருளை வாங்கிக் கொண்டு போய் கொடுங்கள். ஈசனை தரிசனம் செய்து விட்டு, ஈசன், நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரை ஒருமிதமாக வணங்கி விட்டு, சிவ மந்திரங்களை கோவிலில் அமர்ந்து ஜபம் செய்யுங்கள். பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலை வேளையில் ஈசனை தரிசனம் செய்து பின்னர் வீட்டிற்கு வந்து விரதத்தை முடித்துக் கொள்வது முறையாகும். இம்முறைப்படி ஈசனை பிரதோஷ வேளையில் வணங்குபவர்களுக்கு வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் உடனே நீங்கிவிடும், சகல செல்வ வளங்களும் நிறையும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
வீட்டில் விநாயகருக்கு இதை செய்தால் நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் கூட உடனே நடக்கும் தெரியுமா? மனதில் உள்ள ஆசைகள் உடனே நிறைவேற பரிகாரம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.