உடைத்த தேங்காய் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் வைக்க டிப்ஸ்

coconut
- Advertisement -

விசேஷ நாட்கள் என்று வரும் பொழுது நாம் சுவாமிக்கு தேங்காய் உடைத்து வைத்து பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது. அப்படி உடைத்த தேங்காயை நாம் உடனே உபயோகப்படுத்தி விட்டோம் என்றால் தேங்காய் வீணாகாது. அதை உபயோகப்படுத்த முடியவில்லை என்னும் பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களிலேயே அதற்கு மேல் மஞ்சள் நிறமாக ஒரு படிவம் படர்ந்து விடும். மேலும் ஒரு வித வாடையும் ஏற்பட்டுவிடும். இதனால் அதை நம்மால் உபயோகப்படுத்த முடியாது. இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் உடைத்த தேங்காயை ஒரு வாரம் வரை சமையலுக்கு எப்படி உபயோகப்படுத்துவது என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக அனைவருக்கும் தெரிந்த சில விஷயங்கள் இருக்கின்றன. ஒரு தேங்காயை உடைத்து விட்டோம் என்றால் முதலில் கண்ணு இருக்கும் பகுதியை தான் உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால் அதுதான் முதலில் கெட்டுப் போவதற்குரிய வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் உடைத்த தேங்காயில் நாம் உப்பை தடவி வைத்தாலும் அது விரைவில் கெட்டுப் போகாது என்று கூறுவார்கள். அந்த மாதிரி நாம் உப்பை தடவுவதற்கு முன்பாக தேங்காயில் இருக்கும் ஈரப்பதத்தை ஒரு சுத்தமான துணியை வைத்து துடைத்து விட்டு கைப்படாமல் ஸ்பூனை பயன்படுத்தி உப்பை தடவினால் தான் அந்த தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் தேங்காய் மூடி மூழ்கும் அளவிற்கு ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி தேங்காய் மூடியை வைக்கும் பொழுதும் அந்த தேங்காய் விரைவில் கெட்டுப் போகாது. ஆனால் இந்த தண்ணீரை தினமும் நாம் மாற்ற வேண்டும். இந்த அளவிற்கு பெரிய பாத்திரத்தில் வைக்க முடியாது என்று நினைப்பவர்கள் தேங்காயை கீறி ஒரு சிறிய டிபன் பாக்ஸில் போட்டு அது மூழ்க தண்ணீரை பிடித்து வைக்கலாம். இந்த தண்ணீரையும் நாம் தினமும் மாற்ற வேண்டும்.

தேங்காயை சமையலுக்கு துருவி உபயோகப்படுத்துபவர்கள் அதிகமான பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேங்காயை உடைத்த உடனேயே துருவி வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் போடில் வைத்து துருவி வைத்துக் கொள்ளலாம். இப்படி துருவிய தேங்காயை ஒரு தட்டில் பரப்பி வெயிலில் உலர்த்த வேண்டும் இப்படி உணர்த்தும் பொழுது அந்த தேங்காயில் இருக்கக்கூடிய தண்ணீர் சத்தானது நீங்கிவிடும். பிறகு இதை நாம் ஒரு வாரம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

வெயில் காலம் இல்லாத சமயத்தில் இந்த தேங்காயை அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் சத்து போகும் அளவிற்கு வறுத்து விட்டு எடுத்து வைத்தாலும் ஒரு வாரம் வரை நம்மால் உபயோகப்படுத்த முடியும். இதை தவிர்த்து நாம் பிரிட்ஜில் வைப்பதாக இருந்தால் ஃப்ரீசரில் வைக்கும் பொழுது அதை ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை கூட நாம் பயன்படுத்தலாம். தேங்காயை கீரியும் அப்படி வைக்கலாம். துருவியும் அப்படி வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு வைக்கும் பொழுது ஜிப்லாக் கவரில் நாம் வைத்தோம் என்றால் அது ரொம்ப நாட்கள் கெடாமல் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யும் முறை

விரைவில் வீணாக கூடிய தேங்காயை இந்த முறையில் நாம் பராமரித்தோம் என்றால் ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை நம்மால் உபயோகப்படுத்த முடியும்.

- Advertisement -