வீட்டு செடிகளில், விளைச்சலை அதிகரிக்க, தேமோர் கரைசலை முறையாக எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது?

theemore3
- Advertisement -

தேமோர் கரைசல் என்றால் என்ன என்பது, விவசாயம் செய்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த தேமோர் கரைசலை நம் வீட்டில் இருக்கும் செடிகளுக்கும் எப்படி பயன்படுத்தலாம்? நம் வீட்டிலேயே தேமோர் கரைசலை, நம் கையாலேயே எப்படி தயாரிப்பது?  தேமோர் கரைசலை செடிகளுக்கு எப்படி தெளிக்க வேண்டும், எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும், தேமோர் கரைசல் செடிகளுக்குத் தெளித்தால் அதன் மூலம் ஏற்படக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

theemore

தேமோர் கரைசலை, நம் வீட்டிலேயே செய்ய, 1 லிட்டர் தேங்காய் பாலும், 1 லிட்டர் அளவு மோர் மட்டுமே போதுமானது. (தயிரிலிருந்து வெண்ணெய் நீக்கப்பட்ட மோர்.) தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு அரைத்து, தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு தேங்காயிலிருந்து, ஒரு லிட்டர் அளவு தேங்காய்ப்பால் எடுக்க, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, தேங்காய் பால் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் ஊற்றக்கூடாது. தேங்காயை அரைத்து, நன்றாக வடிகட்டி, திப்பி இல்லாத தேங்காய் பாலை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் 1 லிட்டர் அளவு தேங்காய் பாலையும், 1 லிட்டர் அளவு மோரையும் ஒரு மண் சட்டியில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் மண்சட்டி இல்லை என்றால் பரவாயில்லை. ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலந்து, பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி, அதற்கு மூடி போட்டு, நிழலான இடத்தில் வைத்துவிட வேண்டும். காற்று, எக்காரணத்தைக் கொண்டும் டப்பாவிற்குள் போகக்கூடாது. இந்த கரைசல் ஐந்திலிருந்து, ஆறு நாட்கள் நன்றாக புளிக்க வேண்டும். (ஆறு நாட்களுக்கு மேல், பத்து நாட்கள் புளித்தாலும் தவறில்லை.)மண்பானையில் புளிக்க வைக்கும் பட்சத்தில், இந்த தேமோரில், நுண்ணுயிர் சத்து அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

theemore1

உங்கள் வீட்டில் மண்பானை இல்லை என்றால் பரவாயில்லை. பிளாஸ்டிக் டப்பாவிலோ அல்லது பிளாஸ்டிக் வாட்டர் கேனிலோ, இந்த கலவையை புளிக்க விடுங்கள். மண்பானையில் இந்த தேமோர் கரைசலை தயார் செய்தால், அந்த மண் பானையை துணியால் மூடி, கயிறு இறுக்க கட்டிக் கொள்ள வேண்டும். ஐந்திலிருந்து, ஆறு நாட்கள் கழித்து, இந்த கரைசல் நன்றாக புளித்து, நுண்ணுயிர் சத்துக்கள் நிறைந்து, தயாராகிவிடும்.

- Advertisement -

இப்போது கரைசல் இருக்கும் டப்பாவின் மூடியை திறந்து, ஒரு குச்சியை விட்டு, இதை நன்றாக கலக்கி விடவேண்டும். புளித்த வாடையுடன், தேமோர் கரைசல் தயாராகி இருக்கும். 1/2 லிட்டர் அளவு தண்ணீரில், 15ml தேமோர் கரைசலை கலந்து உங்களது செடிகளுக்கு ஸ்பிரே செய்ய வேண்டும்.

plants-spray

முதலில் எல்லா செடிகளிலும் ஸ்ப்ரே அடித்து விடக்கூடாது. உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு செடிக்கு சோதனை செய்து பாருங்கள். செடிகளில் உள்ள இலைகள் வாடுவதுபோல இருக்கும்பட்சத்தில், 15ml தேமோர் அளவை, 10ml ஆக குறைத்துக்கொள்ளலாம். இந்த தேமோர் கரைசலை வெயில், சமயங்களில் கட்டாயம் செடிகளுக்கு அடிக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

rose-plant-spray

சூரிய உதயத்திற்கு முன்பாக காலை 6 மணிக்கே தேமோர் கரைசலை அடித்துவிட வேண்டும். அல்லது மாலை 5 மணிக்கு பிறகு, சூரிய அஸ்தமனத்திற்கு பின், தேமோர் கரைசல் ஸ்பிரே செய்ய வேண்டும். செடிகளின், இலைகள், கிளைகள்,  எல்லா இடத்திலும் முழுமையாக ஸ்பிரே செய்து விடுங்கள். இந்த தேமோர் கரைசலை, நம் வீட்டில் உள்ள செடிகள், பூ பூக்கும் சமயத்தில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

theemore1

உங்கள் வீட்டில் உள்ள செடிகள் பூ விட்டதும், அந்த பூ உதிராமல் காய் காய்த்து, அதிகப்படியான மகசூலைப் பெற இந்த தேமோர் கரைசல் உதவியாக இருக்கும். உங்கள் வீட்டில் பழச் செடிகள் இருந்தாலும் கூட, அதில் அதிகப்படியான பழங்கள் காய்ப்பதற்கு, தேமோர் கரைசல் உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. செடிகள் பூ பூக்க ஆரம்பிக்க தொடங்கிய பின்பு, 10 நாள்களுக்கு ஒருமுறை இந்த தேமோர் கரைசலை செடிகளுக்கு ஊற்றலாம். பொதுவாக எந்த செடிகளாக இருந்தாலும்,(முருங்கை மரம், தக்காளி செடி, ரோஜா பூ செடி, கொய்யா மரம், சீதாப்பழம், மாதுளை மரம்) அதிலிருந்து அதிக விளைச்சலை நாம் பெற வேண்டும் என்றால், தேமோர் கரைசலை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அர்ச்சனை பூவில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கிறதா? தெரியாமல் கூட இதை மட்டும் இனி செய்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான தோட்டக்கலை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -