தேங்காய் புளி துவையலை, இவ்வளவு சுவையாக யாராலும் செய்ய முடியாது. சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட இது செம காம்பினேஷன்.

chutney8
- Advertisement -

தேங்காய் புளி துவையல். பாரம்பரியமாக இதை நம்முடைய அம்மா பாட்டி செய்து நாம் பார்த்திருப்போம். மிக மிக எளிமையாக செய்யக்கூடிய துவையல் ரெசிபி இது. இட்லி தோசை சப்பாத்தி சுட சுட சாதத்திற்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த தேங்காய் புளி துவையலை கூடுதல் சுவையுடன் எப்படி செய்வது என்று ஒரு ரெசிபி, கூடவே சேர்த்து குண்டூர் தக்காளி சட்னி எப்படி அரைப்பது என்ற ஒரு ரெசிபி ஆக மொத்தம் இரண்டு சட்னி ரெசிபிகள் ஒரே பதிவில் உங்களுக்காக.

தேங்காய் புளி துவையல்:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, அதில் மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், பூண்டு பல் – 15, கருவாப்பிலை – 1 கொத்து, போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு இதில் தேங்காய் துருவல் – 1/2 மூடி போட வேண்டும். தேங்காயை நிறம் மாறாமல் அந்த எண்ணெயிலேயே நன்றாக சூடு செய்து, வர மிளகாய் – 4 (காரத்திற்கு ஏற்ப) போட்டு, சின்ன நெல்லிக்காய் அளவு – புளி, போட்டு எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை துவையல் பதத்திற்கு அரைக்க வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்ற கூடாது. அரைத்த இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். வழக்கம் போல நல்லெண்ணெயில் கடுகு, கருவாப்பிலை, பெருங்காயம், உளுந்து, வர மிளகாய், தாளித்து இந்த சட்னியில் கொட்டி கலந்து பரிமாறி பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் இருக்கும். இந்த சட்னியை இரண்டு நாள் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும் சுவை மாறாது. சூப்பராக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. இந்த சட்னி செய்ய ஐந்து நிமிடம் எடுப்பதே ரொம்ப ரொம்ப அதிகம் தான். (சில பேர் இந்த சட்னியில் மிளகு சீரகம் சேர்க்காமல் அரைப்பார்கள். உங்கள் விருப்பம் தான் மிளகு சீரகம் சேர்க்க விருப்பமில்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளவும்.)

குண்டூர் தக்காளி சட்னி செய்முறை:
சரி இதேபோல சுலபமாக இன்னொரு சட்னி ரெசிபியையும் இன்று பார்க்கப் போகின்றோம். இது குண்டூர் தக்காளி சட்னி. இதை செய்ய பத்து நிமிடங்கள் எடுக்கும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தனியா – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், தோல் சீவி நறுக்கிய இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் மணக்க மணக்க சிவந்து வந்தவுடன் பெரிய சைக்கிள் இருக்கும் பழுத்த தக்காளி பழத்தை – 1 போட்டு வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இரண்டு நிமிடம் மூடி போட்டால் தக்காளி பழம் வதங்கி வெந்து வரும். இறுதியாக புதினா தழை – சிறிதளவு, கொத்தமல்லி தழை – சிறிதளவு, சின்ன கோலி குண்டு அளவு – புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். வழக்கம் போல இதற்கும் ஒரு தாளிப்பு கொடுத்து விட்டால், சூப்பரான சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: ரேஷன் அரிசியிலும் இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சிங்கன்னா உளுந்து, ஆப்ப சோடா, ஈஸ்ட், வெந்தயம் எதுவுமே சேர்க்காமல் ஆப்பம் நல்லா பஞ்சு போல சாப்டா வரும்.

இந்த இரண்டு சட்னிகளில் உங்களுக்கு எது பிடித்திருந்தாலும் தவறாமல் முயற்சி செய்யவும். இரண்டு சட்னி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ஒவ்வொரு நாளைக்கு, ஒவ்வொரு சட்னியா செஞ்சு அசத்துங்க.

- Advertisement -