உளுந்து ஈஸ்ட் சோடா மாவு எதுவும் சேர்க்காமல் ஆப்பம் செய்முறை

Appam Recipe
- Advertisement -

டிபன் வகைகளிலே இட்லி தோசை போன்றவை கூட நாம் வீட்டில் மாவு அரைத்து செய்து விடலாம். இந்த ஆப்பம் சுட வேண்டும் என்றால் மட்டும் அது எல்லோராலும் செய்து விட முடியாது. அதற்கென பக்குவமாக மாவரைத்து சுட்டால் தான் ஆப்பம் சாப்பிட நன்றாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ஆப்பத்திற்கு மாவை சரியான அளவில் எப்படி அரைப்பது என்பதையும் உளுந்து ஈஸ்ட் சோடா மாவு போன்ற எதையும் சேர்க்காமல் பஞ்சு போல ஆப்பம் எப்படி சுடுவது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

முதலில் இரண்டு கப் ரேஷன் பச்சரிசியை 3 முறை தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்த பிறகு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து 11/2கப் தேங்காய் எண்ணெய் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். துருவும் போது தேங்காயும் பின்புறம் இருக்கும் அந்த கருப்பு பகுதி வராமல் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ஆப்பம் வெள்ளையாக இருக்கும்.

- Advertisement -

மூன்று மணி நேரம் கழித்து அரிசி நன்றாக ஊறி இருக்கும். அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து துருவி வைத்திருக்கும் தேங்காயும் இதில் சேர்த்து விடுங்கள். இப்போது ஆப்பம் மிகவும் சாஃப்ட்டாக வர 2 டேபிள் ஸ்பூன் வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 2 ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து கொள்ளுங்கள். சர்க்கரை சேர்க்கும் போது ஆப்பம் பொன்னிறமாக சிவந்து வரும்.

இவையெல்லாம் சேர்த்த பிறகு ஆப்ப மாவை அரைப்பதற்கு நாம் சேர்க்கும் அந்த முக்கியமான பொருள் இளநீர் தண்ணீர். இதை ஊற்றி அரைக்கும் பொழுது ஆப்பத்தின் சுவை பிரமாதமாக இருக்கும். 2 கப் அரிசிக்கு 2 கப் இளநீர் தண்ணீர் தேவைப்படும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு பவுலின் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவிற்கு 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து எட்டு மணி நேரம் வரை அப்படியே இருக்க வேண்டும்.

- Advertisement -

மாவு எட்டு மணி நேரம் கழித்து நன்றாக புளித்து வந்திருக்கும். இந்த நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இந்த ஆப்ப மாவு தண்ணீராக இருந்தால் தான் ஆப்பம் சுட நன்றாக இ ருக்கும். இப்போது அடுப்பில் ஆப்பக்கடாய் வைத்து சூடான பிறகு மாவை ஊற்றி ஒரு சுழற்று சுழற்றி வைத்து தட்டு போட்டு மூடி விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து எடுத்தால் ஓரங்களில் நல்ல மொறு மொறுவென்றும் நடுவில் மெத்தென்ற ஆப்பம் சுவையாக தயார்.

இதையும் படிக்கலாமே: அட இப்படி கூட கருவேப்பிலை பொடி அரைத்து சாதம் செய்யலாமா. லஞ்ச் பாக்ஸுக்கு கட்டிக் கொடுக்க ஆரோக்கியமான ரெசிபிகளில் இதுவும் ஒன்று.

இந்த ஆப்பத்திற்கு எப்போதுமே தேங்காய்ப்பால் நல்ல காம்பினேஷன். அது மட்டும் இல்லாமல் கடலை கறி, ஆட்டுகால் பாயா போன்றவை எல்லாம் கூட இதற்கு அட்டகாசமாக இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -