வெறும் மூணு பொருள் இருந்தா போதும் தேங்காய் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளா சூப்பரான சட்னி ரெடி. ஒரு முறை இந்த சட்னி அரைச்சுட்டீங்கன்னா இனி எப்பவும் இதையே தான் செய்வீங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கு.

chutney dosai
- Advertisement -

இந்த டிபன் வகைகளுக்கு சைட் டிஷ் ஆக செய்யப்படும் சட்னிகளில் எத்தனையோ வெரைட்டி உள்ளது. அதை சொல்லப் போனால் இந்த நாள் முழுவதும் சொல்லலாம். அத்தனை சட்னி வகைகள் உண்டு. இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ரொம்பவே சிம்பிளா வீட்டில் இருக்கும் மூன்றே பொருட்களை வைத்து சுலபமாக செய்யக் கூடிய ஒரு சட்னி ரெசிபியை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த சட்னியில் அப்படி என்ன பிரமாதம் என்றால், தேங்காயை சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைக்கும் பொட்டுக்கடலை சட்னியின் சுவையிலேயே இந்த சட்னி இருக்கும். ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்பவே பிடிக்கும். அவர்களுக்கு தேங்காய் சேர்த்து அரைத்தாலோ ஜீரண கோளாறு பிரச்சனை இருக்கும். இப்படியானவர்களும் காலையில் அவசர நேரத்தில் ஏதாவது ஒரு சிம்பிளான சட்னி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த சட்னி கண்டிப்பா ட்ரை பண்ணலாம்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் மூன்று பெரிய சைஸ் வெங்காயத்தை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு வெங்காயம் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் சுவை நன்றாக இருக்கும். இப்போது சட்னி தயார் செய்து விடலாம்.

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஆறு வர மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் காரம் உங்கள் வசதிக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம். அதன் பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக சிவந்து வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு கப் பொட்டுக்கடலையை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே ஆகட்டும்.

- Advertisement -

வெங்காயம் பொட்டுக்கடலை இவை எல்லாம் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி லேசான கொரகொரப்பு தன்மையுடன் இந்த சட்னி அரைத்து ஒரு பவுலில் மாற்றி ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான உடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை இரண்டு காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை சட்னியை ஊற்றி விடுங்கள். சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: மணக்க மணக்க ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! தக்காளி சாதத்தை இப்படி கூட செய்யலாம் தெரியுமா? இது போல செஞ்சா ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்க மாட்டாங்க!

இந்த சட்னியை நீங்கள் கெட்டி சட்னியாகவும் வைத்து சாப்பிடலாம். அல்லது தண்ணீராக கரைத்தும் சாப்பிடலாம். தாளிப்பே சேர்க்காமல் கூட சாப்பிடலாம். சுவை ரொம்பவே நன்றாக இருக்கும். இந்த சட்னியை நீங்க ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. அப்புறம் எப்பவும் நீங்க இதை செய்வீங்க.

- Advertisement -