மணக்க மணக்க ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! தக்காளி சாதத்தை இப்படி கூட செய்யலாம் தெரியுமா? இது போல செஞ்சா ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்க மாட்டாங்க!

- Advertisement -

பள்ளிக்கூடம் திறந்தாலே நமக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி அதிகம் தேவைப்படுகிறது. என்னதான் சமையல் செய்வது? என்று தினமும் மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளாமல் வித விதமான வெரைட்டி ரைஸ்கள் செய்து கொடுத்து அசத்தினால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ரொம்பவே வித்தியாசமான மற்றும் அருமையான சுவையில் தக்காளி சாதம் எப்படி தயார் செய்யலாம்? என்பதை தான் இந்த ரெசிபி பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு, பெரிய வெங்காயம் – 3, கருவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி – 5, அண்ணாச்சி பூ – 2, கிராம்பு – மூன்று, உப்பு – தேவையான அளவு, கேரட் – இரண்டு, குடைமிளகாய் – ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன், மல்லித்தூள் – அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, மிளகு தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

தக்காளி சாதம் செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு சாதத்தை குழைய விடாமல் உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அடுப்பை பற்ற வைத்ததில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடிப்பொடியாக பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஒரு கப் கருவேப்பிலையையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வாசனைக்கு அண்ணாச்சி பூ மற்றும் கிராம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களையும் சேர்த்து மசிய வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இவை வதங்கி வர கொஞ்சம் போல உப்பு போட்டுக் கொள்ளுங்கள். நன்கு மசிந்ததும் பின்னர் இவற்றுடன் தேவையான காய்கறிகளையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்தால் ருசியாக இருக்கும். ரொம்பவும் பொடிதாக நறுக்கி இவற்றை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பின்னர் தேவையான எல்லா மசாலா பொருட்களையும் போட்டுக் கொள்ளுங்கள். மேற்கூறிய அளவின் படி மசாலா பொருட்கள் சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இஞ்சி தோல் சீவுவது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம இவ்வளவு நாள் கஷ்டப்பட்டோமே! இதையெல்லாம் இப்படி வைத்தால் சீக்கிரம் அழுகாது தெரியுமா?

பின்னர் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி ஒரு பிரட்டு பிரட்டி விடுங்கள். பின்னர் நீங்கள் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். ஒரு முறை நன்கு எல்லாவற்றிலும் கலந்து விட்ட பின்பு மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடுங்கள். அவ்வளவுதாங்க சூப்பரான எளிதான முறையில் தக்காளி சாதம் அருமையான சுவையில் இப்பொழுது தயார்! நீங்களும் இதே மாதிரி லஞ்ச் பாக்ஸ் செஞ்சு பாருங்க ஒரு பருக்கை கூட மிஞ்சாது.

- Advertisement -