கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கண் கலங்கி நிற்கும் சமயத்தில் இந்த ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும். கஷ்டங்கள் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகும்.

navagraham-vilakku
- Advertisement -

சில சமயங்களில் நமக்கு வரும் கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு வழியே தெரியாது. அடிமேல் அடி விழும். எதை தொட்டாலும் பிரச்சனையில் போய் முடியும். வீட்டில் சண்டை சச்சரவுகள் நிம்மதி இல்லாத சூழ்நிலை. பார்க்கும் வேலையில் நிம்மதி இருக்காது. என்னதான் பாவம் செய்தோமோ என்று கண்கலங்கி பிரச்சினைக்குத் தீர்வு தெரியாமல் நிர்க்கதியாக நிற்கும் போது உங்களுடைய வீட்டில் குல தெய்வத்தையும் நவக்கிரகங்களையும் நினைத்து இந்த ஒரு வழிபாட்டை மேற்கொண்டாலே போதும். கஷ்டங்களுக்கு சீக்கிரத்தில் நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.

sad

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளை வைத்து தான் நமக்கு கஷ்டமோ நஷ்டமோ, லாபமோ சந்தோஷமோ நம்முடைய வாழ்க்கையில் வரும். உங்களுக்கு பிரச்சினைகள் என்று வரும் நேரத்தில் நீங்கள் செய்த பாவத்திற்கான மன்னிப்பை அந்த இறைவனிடம் முதலில் கேட்டுக் கொள்ளுங்கள். இனி அறியாமல் கூட மனதார எந்த பாவத்தையும் செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் மண் அகல் விளக்கை வாங்கி கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு நவதானியங்களை போட்டுக் கொள்ளுங்கள். நவகிரகங்களை நினைத்து நவ தானியத்தில் நல்லெண்ணை ஊற்றி, பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, தீபத்தின் முன்பு அமர்ந்து தீப ஒளியை பார்த்து மனதார உங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அந்த குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

Navathaniyam

இந்த தீபத்தை இந்தக் கிழமையில் இந்த நேரத்தில் தான் ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. தீராத கஷ்டம், மனத்துயரம் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் என்றால், உடனடியாக இந்த தீப வழிபாட்டை உங்களுடைய வீட்டில் தாராளமாக செய்யலாம். நிச்சயமாக பிரச்சனையில் இருந்து வெளிவரக்கூடிய ஏதாவது ஒரு வழி உங்களுக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் நவதானியங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். சமையலறையில் அரிசி பருப்பு வகைகளை எப்போதும் நிரம்ப வைத்திருப்பீர்கள் அல்லவா, அதுபோல் தான். ஒரு கண்ணாடி பாட்டிலில் நவதானியத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய நவதானியங்களை பயன்படுத்தவில்லை என்றாலும் அதை எடுத்து காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டுவிட்டு மீண்டும் அந்த பாட்டிலில் புதிய நவதானியங்களை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

nei-deepam

புதியதாக நீங்கள் வீடு கட்டுவதாக இருந்தால் உங்களுடைய நிலை வாசலுக்கு அடியில் நவமணிகள் என்று சொல்லப்படும் நவரத்தினங்களை வைத்து கட்ட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு பெரிய கஷ்டமும் நுழையாது. வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நிலை வாசலுக்கு வெளியே நின்றுவிடும். இதுவும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான். ஒருவேளை நீங்கள் நிலைவாசல் வைக்கும் போது நவரத்தினங்களை பூமியில் புதைக்க வில்லை என்றால் உங்களுடைய வீட்டில் தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், நிலைவாசலின் அருகில் ஒரு சிறிய பள்ளத்தை தோண்டி நவரத்தினங்களை புதைத்து வைத்துக் கொண்டாலும் அது நல்ல பலனைக் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -