ஒவ்வொரு முடியும் அப்படியே திக்கா தாப்பு கயிறு மாதிரி வளர ஆரம்பிச்சுடும். ஒரு முடி கூட அறுபடாது. இந்த ஹேர் ஜெல்லை மட்டும் தலையில் போட்டு பாருங்க.

hair10
- Advertisement -

சில பேருக்கு ஒவ்வொரு முடியும் ரொம்பவும் மெல்லிசாக இருக்கும். அதனாலேயே முடி மெலிந்து போய் ஒல்லிக்குச்சி போல இருக்கும். ஒவ்வொரு முடியும் நன்றாக தாம்பு கயிறு போல் திக்காக வளர தொடங்கிவிட்டால், அந்த முடிகள் சீக்கிரம் அறுபடாது. அதேசமயம் முடி அடர்த்தியாகவும் இருக்கும். முடி திக்காக தாம்பு கயிறு போல அறுபடாமல் வளருவதற்கு ஒரு ஹேர் ஜெல் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்றுதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த அழகு குறிப்பு உங்களுக்கு ஆரோக்கியமான முடியை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

திக்கான முடியை கொடுக்கும் ஹேர் ஜெல்:
இந்த ஜெல்லை தயார் செய்ய முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 4 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, கருஞ்சீரகம் 2 ஸ்பூன், வெந்தயம் 2 ஸ்பூன், செம்பருத்தி இலை 10, இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். இந்த மூன்று பொருட்களின் சாறு தண்ணீரில் இறங்கியதும், ஆளி விதை என்று சொல்லப்படும் ஃபிளக்சீட்ஸ் 4 ஸ்பூன், போட்டு மீண்டும் கொதிக்க வைத்தால் தண்ணீர், ஜெல் பதத்தில் மாறும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, இது சூடாக இருக்கும் போதே வடிகட்டி ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த ஜெல்லை மிக்ஸி ஜாரில் ஊற்றி ஆனியன் ஜூஸ் 4 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன், ஊற்றி ஒரு ஓட்டு ஓட்டினால் சூப்பரான ஜெல் பதத்தில் நமக்கு ஒரு லிக்விட் கிடைத்திருக்கும். இதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 2 வாரம் வரை கெட்டுப் போகாது. இப்போது எல்லாம் ஜெல்லை தலையில் வேர்க்கால்களில் நேரடியாக அப்ளை செய்வதற்கு ஏதுவாக பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கிறது. அதுபோல ஒரு பாட்டிலை வாங்கி அதில் இந்த ஜெல்லை ஊற்றிக் கொள்ளவும்.

இந்த ஜெல்லை நன்றாக வேர்க்கால்களில் படும்படி தலையில் அப்ளை செய்யவும். நுனி முடி வரை கூட அப்ளை செய்து கொள்ளலாம். இதில் ஃபிளக்ஸ் சீட் சேர்த்திருப்பதால் உங்களுடைய தலைமுடி ஷைனிங்காக திக்காக அறுபடாமல் வளரும். பேக் போட்டு தலைக்கு மேலே ஒரு கவர் போட்டுக் கொள்ளுங்கள். 1/2 மணி நேரம் கழித்து ஜென்டில் ஆன ஷாம்பு போட்டு தலையை மசாஜ் செய்து கசக்கி அலசிவிடுங்கள்.

- Advertisement -

இந்த ஜெல்லை வாரத்தில் இரண்டு முறை கூட பயன்படுத்தலாம். உங்களுடைய முடி மூன்று மாதத்தில் திக்காக வளர்ந்து இருப்பதை உணருவீர்கள். அதே சமயம் ஒரு முடியை எடுத்து அப்படியே அறுப்பது போல, இரண்டு விரல்களிலும் சுற்றி இழுத்துப் பாருங்கள் முடி அறுபடவே படாது. அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா மாறிடும்.

இதையும் படிக்கலாமே: கருகருவென்று அடர்த்தியான கூந்தல் வளர்வதற்கு கடுகு எண்ணெயை இப்படித்தான் பயன்படுத்தணும் தெரியுமா? நீளமா மட்டும் இருக்கும் முடியை அடர்த்தியாகவும் ஆக்க இதை செய்யுங்க!

இந்த ஹேர் ஜெல்லை தலையில் போட்டுவிட்டு, அதற்கு மேலே வேறு ஏதாவது ஹேர் பேக் தேவை என்றாலும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம் தவறு ஒன்றும் கிடையாது. உங்களுக்கு இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -