ஆரோக்கியத்தோடு சேர்ந்து அழகும் வேணும்னு நினைக்கிறவங்களுக்காகவே ஒரு சூப்பரான அதே சமயம் சிம்பிளான வெரைட்டி ரைஸ். சிம்பிளான அதே சமயம் ஹெல்தியான ரெசிபி.

thinai Thakkai satham
- Advertisement -

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கூறிய உடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது நம் உணவு பழக்க வழக்கங்கள் தான். உணவு முறை சரியாக இருந்தால் தான் மற்ற அனைத்துமே சரியாக இருக்கும். இந்த உணவு முறையிலே ஆரோக்கியத்தை மட்டுமின்றி அழகையும் சேர்த்து பராமரிக்க கூடிய அனேகமான உணவுகள் என்றால் அது நம் பாரம்பரிய உணவுகள் தான். அந்த வகையில் நம் பாரம்பரிய உணவான திணை அரிசியை வைத்து மிகவும் எளிமையான ஒரு வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என்பதை தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

இந்த சமையல் குறிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக திணை அரிசி பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அப்போது தான் இதை ஏன் நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதன் அவசியமும் புரியும்.

- Advertisement -

பயன்கள்

திணை எனப்படும் இந்த தானியத்தில் மற்ற அனைத்து தானியத்திலும் உள்ளதை விட அதிகமாகவே கால்சியம் சத்துக்கள் உள்ளது. இன்றைய கால சூழ்நிலையில் கால்சியம் சத்து ஒவ்வொருவருக்கும் எவ்வளவு இன்றியமையாதது என்று அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். இந்த தினை அரிசி எலும்பு, பற்கள் போன்றவற்றை வலிமை அடைய செய்வதோடு, நம் உடம்பின் தசைகளையும் நன்கு வலுவாக்க கூடிய தன்மை இதற்கு உண்டு. அதுமட்டுமின்றி இந்த திணை அரிசியை உணவில் நாம் அடிக்கடி சேர்த்து வரும் போது தோளில் நல்ல மினுமினுப்பு தன்மை வருவதோடு சுருக்கங்கள் மறைந்து முகத்துடன் சேர்த்து நம்முடைய உடலும் எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்கும்.

- Advertisement -

இது போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஆரோக்கியமான இந்த தினை அரிசியில் இப்பொழுது ரொம்பவே சுலபமா வெரைட்டி சாதம் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

முதலில் திணை அரிசி ஒரு கப் எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த தானிய வகைகளை பொறுத்தவரையில் எப்பொழுதுமே ஊற வைத்து தான் சமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயம் 2 தக்காளி 4 பச்சை மிளகாய் இவை அனைத்தையும் கொஞ்சம் பெரியதாக நீளவாக்கில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கர் வைத்து சூடானவுடன் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிய பிறகு அரை ஸ்பூன் சோம்பு, ஏலக்காய், பட்டை, இலவங்கம், இவை அனைத்திலும் தலா இரண்டு சேர்த்து அனைத்தும் புரிந்து வந்த பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் பாதி அளவு வதங்கிய பிறகு அரிந்து வைத்த பச்சை மிளகாயும், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அறிந்து வைத்த தக்காளியும் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, ஊற வைத்த திணை அரிசியை தண்ணீர் சுத்தமாக வடித்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் மேலே தூவி ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்த பிறகு குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

சிறிது நேரம் கழித்து விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறந்து சாதத்தை ஒரு முறை கலந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாதம் நாம் பாஸ்மதி அரிசியிலோ மற்ற அரசியலோ செய்வது போல் உதிரி உதிரியாக வராது கொஞ்சம் குழைந்தது போல தான் வரும்.

இதையும் படிக்கலாமே: இனி பூரிக்கு மசாலா செய்யும் போது உருளைக்கிழங்குக்கு பதிலாக இதை சேர்த்து மசாலா செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரச்சினை வரும்னு பயமே இல்லாம இனி பூரி மசாலா சாப்பிடலாம்.

இதே முறையில் வெங்காயம் தக்காளி அனைத்தும் வதங்கிய பிறகு உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் பொடியாக அரிந்து இதில் சேர்த்து அதன் பிறகு திணை அரிசி சேர்த்து செய்யலாம். அது இன்னமும் ருசியாக இருக்கும் குழந்தைகளுக்கும் காய்கறிகளை சேர்த்து கொடுத்தது போல இருக்கும். இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை அடிக்கடி நம் உணவு முறைகளில் சேர்த்துக்கொண்டு நோய் நொடி இல்லாத வாழ்வை வாழலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

- Advertisement -