இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்களுடைய வீட்டை தரித்திரம் பிடிக்காது. பிடித்த பீடை விலகும். வீடு கோவிலாக மாறும்.

mahalakshmi
- Advertisement -

நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக எத்தனையோ வழிபாட்டு முறைகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எல்லா விஷயங்களையும் எல்லோரும் பின்பற்ற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அது சந்தேகத்திற்குரிய கேள்விதான். ஆனால், எல்லோராலும் தினம்தோறும் பின்பற்றக் கூடிய ஐந்து விஷயங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஐந்து விஷயங்களை கடைபிடித்து வந்தாலே போதும். உங்கள் வீட்டை பிடித்த தரிதிரம் நீங்கிவிடும். வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைந்துவிடுவாள். வீடு கோவிலாக மாறும். வீட்டில் நிம்மதி நிரந்தரமாக தங்கும்.

முதலாவது விஷயம். வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் காலை மாலை இரண்டு வேளையும் விளக்கு ஏற்ற வேண்டும். குறிப்பாக வீட்டில் ரொம்பவும் கஷ்டம் இருக்கிறது என்றால், வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி வைப்பது மிக மிக நல்லது. ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றி விட்டு விடுங்கள். அவ்வளவு தான். பிறகு தூங்கப் போனால் கூட தவறு கிடையாது. அதிகாலை 5:00 மணிக்கு முன்பு இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

இரண்டாவது விஷயம். வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு பசும்பால் வாங்கி கொடுக்க வேண்டும். அதாவது கோவிலில் அபிஷேகம் நடக்கும் அல்லவா. அந்த அபிஷேகத்திற்காக உங்களால் முடிந்த அளவு 1/4 லிட்டர் பசும்பால் வாங்கி கொடுத்தால் கூட போதும். பெருமாளுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும். அம்பாளுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும். உங்கள் கையால் பால் வாங்கி கொண்டு போய் கோவில் குருக்களிடம் கொடுத்து விடுங்கள். பணமாக கொடுக்கக்கூடாது. பால் தான் உங்கள் கையால் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

மூன்றாவது விஷயம். வீடு எப்போதுமே சுத்தபத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். சிறு குழந்தைகள் அல்லது நிறைய பேர் இருக்கும் வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே கலைந்து போய் இருக்கலாம். தவறு கிடையாது. ஆனால் அழுக்குத்துணி கெட்டுப்போன உணவுப் பொருட்கள் சுத்தம் செய்யாத குளியலறை கழிவறை, வீட்டில் இருக்கும் பொருட்கள் முழுவதும் ஒட்டடை தூசி, ஈக்கள் கொசுக்கள் எறும்பு இவைகள் இருக்கவே கூடாது. துர்நாற்றம் வீசக் கூடாது.

- Advertisement -

அடுத்தபடியாக தினமும் ஒரு சாம்பிராணி ஒரு வீட்டில் ஏற்றப்படவேண்டும். இந்த சாம்பிராணி வாசம் எப்போதும் வீட்டில் நிறைந்து இருக்கும் பட்சத்தில் வீட்டை தரித்திரம் பிடிக்காது. நெருப்பு மூட்டி தான் சாம்பிராணி போடவேண்டிய கட்டாயம் இல்லை. இன்று கப் சாம்பிராணி, ரெடிமேடாக கடையில் கிடைக்கும் வாசனை நிறைந்த எந்த சாம்பிராணி ஆக இருந்தாலும் ஏற்றலாம்.

இதேபோல வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்து வர உங்களுடைய கஷ்டங்கள் நீங்கும். கட்டாயம் விநாயகர் வழிபாடு செய்பவர்கள், அசைவம் சாப்பிடக்கூடாது. முடிந்தால் ஒரு வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வாங்கி வைத்து, விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -