விடாப்பிடியாக தினமும் கோவிலுக்கு இப்படி சென்றால், அந்த தெய்வம் தினம் தினம் உங்களுடனே, உங்கள் வீட்டிற்கு வந்து விடும். நீங்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வாரி தந்துவிடும்.

- Advertisement -

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று சொல்லுவார்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தினம் தினம் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு இதில் மாதவிலக்கு நாட்கள் மட்டும் விதிவிலக்கு. மாதவிலக்கு நாட்களில் கோவிலுக்கு போகலாமா என்ற எதிர்மறையான கேள்விகளில் கேட்க வேண்டாம். முன்னோர்கள் சொல்லியது, சாஸ்திரம் சொல்லியது மாதவிலக்கு சமயத்தில் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதுதான். சரி, நம்முடைய வேண்டுதல் இறைவனின் செவிகளில் விழ வேண்டும், நாம் இறைவனை தேடி போவது ஒரு பக்கம் இருக்க, அந்த இறைவன் நம்மை தேடி நம் கூடவே வருவான். நீங்கள் தினமும் இப்படி கோவிலுக்கு சென்றால். எப்படி கோவிலுக்கு செல்ல வேண்டும். எந்த முறையில் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் இறைவனை உணர வைக்கும் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இறைவனை அடைய எளிமையான வழி:
தினமும் நாம் குளிப்பதற்கு மறந்தாலும், மற்ற வேலைகளை செய்வதற்கு மறந்தாலும், பசித்தால் சாப்பிட மட்டும் மறப்பதே கிடையாது. அதுபோல தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் கட்டாயம் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்ய வேண்டும். இது வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

- Advertisement -

காலை 5 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்று என்பவர்களால் இதை செய்ய முடியாது. இருந்தாலும் காலை அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பாக இரண்டு நிமிடம் மட்டும் இறைவனுக்காக ஒதுக்குங்கள். உங்களை இப்படி பரபரப்பாக வேலைக்கு செல்ல வைக்கும் இறைவனுக்கு கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும். அது உங்களுக்கு மேலும் மேலும் முன்னேற்றத்தை கொடுக்கும்.

காலையிலிருந்து கோவிலுக்கு சென்று இறைவனை பார்த்து விட வேண்டும். இப்படி தினமும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் நீங்கள் இறைவனை சென்று வழிபாடு செய்ய, உதாரணத்திற்கு 48 நாட்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், 49 வது நாள் நீங்கள் கோவிலுக்கு செல்லவில்லை என்றால் இறைவன் ‘தினமும் வரக்கூடிய இந்த பக்தர், இன்னைக்கு வரவில்லையே, ஏன் என்று யோசிக்கலாம்’ அந்த அளவிற்கு இறைவனுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கமான ஒரு பந்தம் ஏற்பட்டு விடும்.

- Advertisement -

நம்முடைய மனதிற்கு பிடித்தவர்களை பார்க்க சென்றால் எவ்வளவு ஆர்வமாக, அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வோம். அதேபோல இறைவனையும் விரும்பி, ஆசைப்பட்டு, இஷ்டத்தோடு வழிபாடு செய்ய செல்ல வேண்டும். இறைவனுக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒரு பொருள் நல்லெண்ணெயில் விளக்கு, வாசனை நிறைந்த பூ, எதுவுமே கிடைக்கவில்லை என்றால் ஒரே ஒரு வாழைப்பழம், ஒரு கொய்யாப்பழம் என்று இறைவனுக்காக சமர்ப்பணம் செய்துவிட்டு வழிபாட்டை செய்துவிட்டு, வேண்டுதலை வைத்து விட்டு வந்து பாருங்கள். உங்களுக்கு கிடைக்கக்கூடிய மன நிறைவு என்பது வேற லெவல்ல இருக்கும்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்த நீங்கள் சைவம் சமைப்பது, அசைவம் சமைப்பது மற்ற வேலைகளை பார்ப்பது எதுவாக இருந்தாலும் மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, கோவிலுக்கு போய் விட்டு வழிபாடு மேற்கொண்டு விடுங்கள். இதுதான் உங்களுடைய வாழ்க்கையை நல்வழிப்படுத்தும். இந்த பழக்கத்தை நீங்கள் செய்வதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய குழந்தைகளையும் செய்ய சொல்லுங்கள்.

- Advertisement -

தொடர்ந்து இப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது ஒருநாள் இல்லை என்றாலும் ஒரு நாள் அந்த இறைவன் உங்களை நெருங்கி விடுவார். (இறைவன் எப்போதுமே நம்முடன் தான் இருப்பார். அதை நாம் உணர வேண்டும் அல்லவா அதற்காகத்தான் இந்த வழிபாடு.) அந்த இறைவன் உங்கள் உடன் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவார். பிறகு உங்களை அறியாமலேயே ஒரு இறை சக்தி உங்களுக்குள் வந்துவிடும். இதை சொல்வதன் மூலம் யாருக்கும் புரியாது. அதை உணர்ந்தால் தான் புரியும். உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால் இதேப் போல வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். பெரிய பெரிய கஷ்டங்கள், குழப்பங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் வராது. மனது பக்குவம் பெறும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை மட்டும் உங்கள் கையால் வாங்கி கொடுங்கள். உங்கள் குடும்பத்தில் மங்கள காரியமும், சுப நிகழ்ச்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கும்.

நான் சாமியை இப்படி விழுந்து விழுந்து கும்பிட்டால் தான், சாமி நமக்கு அருள் தருமா என்ற சந்தேகம் நிச்சயம் இறுதியில் எல்லோரும் மனதிலும் இருந்திருக்கும். அப்படி கிடையாது. வீட்டுக்குள்ளேயே இருந்து வீட்டுக்குள்ளேயே சாமி கும்பிட்டு, வீட்டுக்குள்ளேயே இறை வழிபாடு செய்தாலும், நேர்மறை ஆற்றல் நிறைந்த அந்த கோவிலில் போய் ஓர் ஐந்து நிமிடம் உட்கார்ந்து சாமி கும்பிட்டு தான் பாருங்களேன். கிடைக்கும் மன நிறைவுக்கு கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஈடு இணை ஆகாது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -