வீட்டில் நிம்மதி நிலைக்க செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்

பலரது வீட்டில் ஏதோ ஒரு காரணத்துக்காக எப்போதும் சில பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும். அது பண பிரச்னையாக இருக்கலாம் இல்லை வேறு ஏதாவது பிரச்னையாக இருக்கலாம். அத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க ஆன்மீக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளன. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

 •  மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
 • வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
 • திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

 • அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
 • கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
 • எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
 • சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

 • சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
 • இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
 • நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
 • திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
 • ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

 • கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக் கூடாது.
 • குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.
 • விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
 • மகா சிவராத்திரி மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது.
 • சிவனுக்கு உரிய வழிபாட்டில் லிங்கம் அருவுருவம் வகையைச் சார்ந்தது.

 • பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
 • செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
 • இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.
 • பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

 • புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
 • பார்க்கும் எல்லாவற்றிலும் ஆசை கொள்ளக் கூடாது.
 • கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.