திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் மகிமை

murugan paneer ilai
- Advertisement -

பக்தர்களின் துயரை அணுவளவும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆறுமுகனை தினந்தோறும் வழிப்படுபவர்கள் வாழ்வில் என்னாளும் ஏறு முகம் தான். இது வெறும் பொய்யான வாக்கு கிடையாது. இந்த வார்த்தைக்கான அர்த்தம் முருகப் பெருமானை வழிபடுபவர்களுக்கும், அவரின் மகிமையை உணர்ந்தவர்களுக்கும் நன்றாக புலப்படும்.

அத்தகைய முருகப் பெருமானை நம்முடைய சகல பிரச்சனைகளையும் தீர எளிமையான முறையில் வழிபடலாம். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் முருகப்பெருமானின் திருத்தலத்தில் தரப்படும் மபிரசாதத்தின் மகிமையும் அதன் மூலம் நாம் அடையக் கூடிய நன்மையை பற்றியும் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

சகல துன்பமும் தீர முருகன் பிரசாதம்

நம்முடைய சகலவித துன்பங்களையும் தீர்க்கும் அருள் பெற்ற முருகப் பெருமானின் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று தான் திருச்செந்தூர். அங்கு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் எப்படி சேர்த்துக் கொள்ளலாம் என்பதையும் பார்க்கலாம்.

போரில் சூரபத்மனை வீழ்த்தி மயிலாகவும், வேலாகவும் தன்னுடன் வைத்துக் கொண்டவர் முருகப் பெருமான். சூரபத்மனை வதம் செய்து முடித்த பின் போர்க்காயங்கள் ஆற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தன்னுடைய பரிவாரங்களுக்கு தன் பன்னிரு கரங்களால் விபூதி பிரசாதத்தை வழங்கினார் என்பது தான் இந்த தல புராணம்.

- Advertisement -

சூரசம்காரம் முடிந்த பின்னர் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளார்கள் என்பதும் ஐதீகம். இதனால் பன்னீர் மர இலைகள் வேத மந்திர சக்தி உடையதாகவும், அந்த இலையில் பத்திரப்படுத்தும் விபூதிக்கு வேத மந்திர சக்திகள் உடையதாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி தாடகையை ஸ்ரீராமன் மூலமாக வதம் செய்த விசுவாமித்திர மகரிஷிக்கு ஏற்பட்ட குன்மம் நோய் தீர இந்த பன்னீர இலை விபூதி உதவியதாகவும் புராணங்கள் சொல்கிறது. இந்த பிரசாதத்தை தீராத நோயினால் துன்பப்படுபவர்கள் தினந்தோறும் நெற்றியில் இட்டு வரும் போது அது விரைவில் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

வலிப்பு, குஷ்டம், நீரழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகள் கூட இந்த இலை பிரசாதத்தை பூசிக் கொண்டால் மறைந்து விடும் என்ற வாக்கு ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தின் ஸ்லோகத்தில் உள்ளது. இந்த பன்னீர் இலை பிரசாதத்தின் மகிமைகள் இன்னும் எவ்வளவோ உள்ளது.

ஆகையால் தான் இன்றாளவும் திருச்செந்தூரில் முருகப்பெருமான் பாதத்தில் வைத்து வணங்கிய விபூதியை பக்தர்களுக்கு பன்னீர் இலையில் வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை சேமித்து வைப்பது பெரும் செல்வத்தை சேமித்து வைப்பது போன்று தான்.

அது மட்டும் இன்றி திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை மனதார வேண்டிக் கொண்டு தினந்தோறும் இந்த பன்னீர் இலை பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது தடைகளும் அகலும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவில் மகிமை

இத்தகைய மகாசக்தி பெற்ற பன்னீர் பிரசாதத்தை நாமும் தினந்தோறும் நெற்றியில் இட்டுக் கொண்டால் நம்முடைய சகலவித பிரச்சனைகளும் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -