திருமணம் ஆன பின்பு தான் ‘எனக்கு வாழ்க்கையில் கஷ்டமே ஆரம்பித்தது’ என்ற எண்ணம் உங்களில் யாருக்காவது உள்ளதா? 48 நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதுமே!

marriage

சில ஆண்களுக்கு திருமணம் நடந்தவுடன் மனைவி வந்த யோகம், மண்ணை எடுத்தாலும் பொன்னாக மாறி, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சென்றிருப்பார்கள். சிலருக்கு திருமணம் ஆன பின்பு, முன்னேற்றமும் இருக்காது. தோல்விகளும் இருக்காது. வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கும். சில பேருக்கு திருமணம் நடந்த நேரத்தில் இருந்தே பிரச்சனைகள் தலைவிரித்து ஆட ஆரம்பிக்கும். இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லப்படவில்லை. ராசி உள்ளவர்கள், ராசி இல்லாதவர்கள் என்றும் பிரித்து பேசுவதாகவும் சொல்லப்படவில்லை.

marriagel

திருமணம் ஆன பலபேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இது. திருமணம் ஆன பின்புதான் எனக்கு வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வர தொடங்கியுள்ளது. அந்த கஷ்டம் மனைவியினால் வந்து இருந்தாலும் சரி, கணவனால் வந்து இருந்தாலும் சரி, வீட்டிலிருக்கும் மனைவி இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். எப்படி செய்வது? சுலபமான முறையில் இப்போது பார்த்துவிடலாம்.

இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பு உங்களது வீட்டை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மற்ற எந்த விதமாக எந்த ஒரு தீட்டும் உங்கள் வீட்டில் இருக்கக்கூடாது. கணவன் மனைவி இருவரும் சுத்தமாகத் தான் இருக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிலக்கு நாட்கள் என்பது தவிர்க்க முடியாது. அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

marriage
Marriage matching

இதற்கு அடிப்படையாக நமக்கு தேவையான பொருள் மஞ்சள் துணியும், மஞ்சள் கிழங்குகளும் தான். குண்டு மஞ்சளாக இருந்தாலும் சரி, விரலிமஞ்சள் ஆக இருந்தாலும் சரி, மஞ்சள் துணியில் முதலில் 9 மஞ்சளை வைத்து முடிச்சு போட்டு வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரத்தை தொடங்கிய நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நல்ல நாளாக பார்த்து காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த நாளிலிருந்து பரிகாரத்தை தொடங்குங்கள்.

- Advertisement -

marriage

இரவு தூங்கும் போது உங்களது தலையணைக்கு அடியில் அதாவது குடும்பத் தலைவியின் தலையணைக்கு அடியில், இந்த ஒன்பது மஞ்சள் கொண்ட முடிச்சை வைத்து தூங்க வேண்டும். மறுநாள் காலை அந்த மஞ்சளை எடுத்து ஒரு அலமாரியில் பத்திரமாக வைத்து விடுங்கள். 9 நாட்கள் அதே மஞ்சளை தலையணையில் வைத்து படுத்துக் கொள்ளலாம். ஒன்பது நாட்கள் கழித்து பழைய மஞ்சளை எடுத்து விட்டு புதிய மஞ்சளை தலையணைக்கு அடியில் வைத்து படுத்து கொள்ளவேண்டும். பழைய மஞ்சள் கிழங்குகளை குழைத்து முகத்தில் பெண்கள் பூசிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். பூஜைக்கு மட்டும் இந்த மஞ்சளை பயன்படுத்த வேண்டாம்.

virali-manjal

இதேபோல் 48 நாட்களும் செய்ய வேண்டும். 48வது நாள் முடிந்த பின்பு கணவனும் மனைவியும் இஷ்ட தெய்வ கோவிலுக்கு செல்லலாம் அல்லது குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம். சென்று, முடிந்தால் ஒரு இரவு அந்த கோவிலிலேயே தங்குவது மிகவும் நல்லது. கட்டாயமாக கோவிலில்தான் தங்க வேண்டுமே தவிர கோவில் வளாகத்திற்குள் தங்க வேண்டுமே தவிர, தனியாக கோவில் இருக்கும் பகுதியில் அறை எடுத்து எல்லாம் தங்கக் கூடாது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.

manjal-kizhangu

48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு கோவிலில் தங்கி விட்டு, அதன் பின்பு, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் கிழங்குகளை மனைவி தன் தலைக்கு அடியில் வைத்து தூங்கும்போது, அந்த குடும்பத்திற்கு இருக்கும் துரதிர்ஷ்டம் விட்டு நீங்கி விடும்.

manjal

திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்ததில் ஏதேனும் ஆன்மீக ரீதியாக தோஷங்கள், ஜாதகரீதியாக தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கிவிடும். இந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்து முடித்த பின்பு நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.

marriage

பொதுவாகவே மஞ்சளுக்கு எந்த ஒரு தோஷத்தையும் நிவர்த்தி செய்யக்கூடிய தன்மை உண்டு என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட மனைவி இந்த பரிகாரத்தை செய்தால், நிச்சயமாக நல்ல பலன் உண்டு.

Hindu Marriage

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாதவிலக்கு ஏற்படும் போதும் நிச்சயமாக பெண்கள் இந்த மஞ்சளை தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். தவறு ஏதும் கிடையாது. ஆனால் இந்த 48 நாட்களும் கணவன் மனைவி இருவரும் அசைவம் சாப்பிடாமல் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக இந்த சுலபமான பரிகாரத்தின் மூலம் பெரிய பெரிய பலன்களை உங்களால் அடைய முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை பூஜையில் சம்பாதிக்கும் பணத்தை இப்படி வைத்தால் மட்டும் போதுமே?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.