திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

couples
- Advertisement -

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். இந்த ஆயிரம் காலத்து பயிரானது அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இந்த திருமண வைபோகம் நடப்பதில் தடைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து திருமணம் நடைபெற்று கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்று நினைத்தால் ஆறு மாதங்களிலோ, ஒரு வருடங்களிலோ அல்லது ஐந்து வருடங்களிலோ கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் இனிமேல் தொடர்ந்து ஒன்றாக வாழ முடியாது என்ற முடிவை எடுத்து பிரிந்து சென்று விடுகிறார்கள். இந்த நிலையை மாற்றவும் திருமண தடையை உடைக்கவும் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆஞ்சநேயர் என்று கூறியதும் நம் நினைவிற்கு முதலில் வருபவர்கள் வருபவர் ராமர் தான். ராமரின் அதிபக்தனாக விளங்கக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். ராம நாமம் வைகுண்டத்தில் இருக்காது என்ற ஒரே காரணத்தினால் இன்றளவும் வைகுண்டம் செல்லாமல் இந்த பூலோகத்திலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று நம்முடைய புராணங்கள் கூறுகின்றன.

- Advertisement -

அப்படிப்பட்ட ராமரையும் அவரது மனைவியையும் ஒன்றாக இணைப்பதற்காக பல முயற்சிகளை செய்தவர் தான் ஆஞ்சநேயர். ராமபுராணம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த கதையும் தெரிந்துதான் இருக்கும். அப்படி கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் வகையில் ஆஞ்சநேயர் நடந்து கொண்டதால் அவரை வழிபடுவதால் திருமண நடக்காமல் இருப்பவர்களுக்கும் சரி, நடந்து பிரிந்து சென்றவர்களுக்கும் சரி ஆஞ்சநேயர் ஒரு நல்ல வழியை காட்டுவார்.

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை நாம் செய்யக்கூடிய நாள் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. அந்த நாள் தான் சுவாதி நட்சத்திரம் வரும் நாள். சுவாதி நட்சத்திரம் முழுமையாக இருக்கும் நாளில் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் நேரம் சுவாதி நட்சத்திரமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அந்த நேரத்தில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவருக்கு துளசி மாலை சூட்டி திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் தங்கள் பெயரின் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகி பிரிந்தவர்களாக இருந்தால் தம்பதிகளின் பெயரைக் கூறி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்து விட்டு ஆஞ்சிநேயரை 18 முறை வலம் வர வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரம் வரும் நாள் அன்று இந்த முறையில் ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வருவதன் மூலம் விரைவிலேயே ஆஞ்சநேயரின் அருளால் தங்கள் இணையுடன் சேர்ந்து வாழக்கூடிய பாக்கியத்தை ஆஞ்சநேயர் அருள்வார். திருமணம் நடைபெற்ற உடனோ அல்லது பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்தவுடனோ ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு தம்பதி சகிதமாக சென்று ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தங்கள் கைகளால் பிரசாதமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுக்க

மிகவும் எளிமையான இந்த ஆஞ்சநேயர் வழிபாட்டை ஆஞ்சநேயரின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்தால் கண்டிப்பான முறையில் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற முடியும்.

- Advertisement -