தார ரேகை பலன்கள்

Thara regai
- Advertisement -

மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பது அறிவியலாளர்களின் கருத்து. எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்வது என்பது பல சவால்கள் நிறைந்த விடயமயாகும். இல்லறம் என்னும் நல்லறத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ தான் திருமணம் எனும் சடங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. கைரேகை சாஸ்திரத்தில் “திருமண ரேகை” அல்லது “தார ரேகை” ஒருவரின் வாழ்க்கை துணையை பற்றி கூறுவதாகும். அந்த தார ரேகை பற்றிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Thara regai

சுண்டு விரலின் அடியில் இருக்கும் புதன் மேட்டிற்கும், இருதய ரேகைக்கும் இடையில் உள்ளங்கையின் மடிப்பிலிருந்து தோன்றும் ரேகை தான் “தார ரேகை” அல்லது “திருமண ரேகை”.இந்த தார ரேகை அடர்ந்த நிறத்தில், அழுத்தமாக இருக்கும் பட்சத்தில் கணவன் அல்லது மனைவி மிகவும் அன்பானவராகவும், மற்றவர்களை புரிந்து கொள்ளக்கூடியவராகவும் இருப்பார்.

- Advertisement -

தார ரேகை மிக மெல்லியதாக இருப்பின் கணவன் அல்லது மனைவி நற்குணங்கள் நிறைந்தவராக இருப்பார். பொறுமைசாலிகளாகவும் இருப்பர். தார ரேகையின் முன்பு நட்சத்திரம் போன்ற குறி காணப்பட்டால் கணவன் அல்லது மனைவி ஆரோக்யமானவராகவும், சிறந்த நிர்வாக திறன் உடையவராகவும், குடும்பத்தின் மீது பாசமுள்ளவராகவும் இருப்பார்கள்.

Kai regai

தார ரேகை மோதிர விரலின் அடிப்பகுதியான சூரிய மேடு வரை நீண்டிருந்தால் கணவன் அல்லது மனைவி ஒருவர் மற்றவரின் மனமறிந்து நடந்துகொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள். தார ரேகை குரு மேடான ஆட்காட்டி விரலின் அடிப்பகுதி வரை நீண்டிருந்தால், கணவன் அல்லது மனைவி புகழ் பெற்றவராக இருப்பார். அவர்கள் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருப்பார்கள்.

- Advertisement -

ஒன்றுக்கும் மேற்பட்ட தார ரேகை இருப்பின் அத்தனை திருமணம் அந்த நபருக்கு நடக்க வாய்ப்புண்டு. தார ரேகையில் கருப்பு நிற புள்ளி இருப்பின் அந்த நபரின் கணவன் அல்லது மனைவிக்கு நோய் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
marriageஇதையும் படிக்கலாமே
உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்

இது போன்று மேலும் கைரேகைகள் குறித்து தெரிந்து கொள்ள எங்களுடன் இனைந்து இருங்கள்.

English Overview:
Here we have details about Thirumana regai palangalin Tamil. It is also called as Thara regai in Tamil or marriage regai in Tamil.

- Advertisement -