திருமண தடை விலக துர்க்கை வழிபாடு.

thirumanam durgai
- Advertisement -

அன்றைய காலத்தில் 16 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. ஆனால் இன்றைய காலத்திலோ 40 வயதை கடந்தாலும் திருமணத்திற்கு மணமகளோ மணமகனோ கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த காரணங்கள் அனைத்துமே திருமணத்தில் இருக்கக்கூடிய தடைகளை குறிப்பாக கருதப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் திருமணத்தின் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலக துர்க்கை அம்மனை வழிபடும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

திருமண தடை விலக பல பரிகாரங்களும் வழிபாடுகளும் இருக்கின்றன. சில தெய்வங்களை வழிபடும் பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய திருமண தடையை விலக்கி விரைவிலேயே திருமணம் நடைபெற அருள் புரிவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் தெய்வமாக துர்க்கை அம்மன் விளக்குகிறார்.

- Advertisement -

பொதுவாக துர்க்கை அம்மனை தடைகளை விலக்கும் அம்மன் என்றே கூறுகிறோம். தம் வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வருவார்கள். அதே துர்க்கை அம்மனை நாம் அஸ்தம் நட்சத்திரம் நாளில் வழிபட்டால் நம்முடைய திருமண தடைகள் விலகும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது துர்க்கை அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

மாதத்தில் ஒரு நாள் அஸ்தம் நட்சத்திரம் வரும். அந்த நாளில் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத்துணியை வாங்கி சாற்ற வேண்டும். பிறகு திருமண தடை இருப்பவர்கள் தங்கள் கைகளால் 27 எலுமிச்சம் பழங்களை வாங்கி மாலையாக கோர்த்து துர்க்கை அம்மனுக்கு வழங்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு மாலையாக கோர்க்கும் பொழுது சிவப்பு நிற நூலில் கோர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எலுமிச்சம் பழம் சுத்தமான பழமாக இருக்க வேண்டும். அதாவது புள்ளிகள் எதுவும் இல்லாத பழமாக இருக்க வேண்டும். அடுத்ததாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய தாமரை மலர்களை துர்க்கை அம்மனின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு திருமண தடை இருப்பவர்கள் தங்கள் கைகளால் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு துர்க்கை அம்மன் இடம் மனதார திருமண தடை விலகி விரைவிலேயே திருமணம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த பூஜை முறையை முடித்த பிறகு தங்களால் இயன்ற திருமாங்கல்ய செட்டை வாங்கி கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தந்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பௌர்ணமி அன்று பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

இப்படி தொடர்ந்து ஐந்து மாதங்கள் செய்து வந்தால் தங்கள் ஜாதகத்திலோ அல்லது கிரக நிலையிலோ எதில் எந்த தடைகள் இருந்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் நீக்கி துர்க்கை அம்மன் விரைவிலேயே திருமண பாக்கியத்தை அருள்வார்கள்.

- Advertisement -