ஒரு நாள் மட்டும் இப்படி முருகன் கோவிலில் தங்கினால் திருமணத்தடை விலகி, விரைவில் திருமணம் நடைபெறும்.

marriage murugan
- Advertisement -

ஆண், பெண் இருவருக்குமே தங்கள் வாழ்நாளில் முக்கியமாக கருதப்படுவது திருமணம் தான். திருமணம் என்ற ஒன்று ஒருவரின் வாழ்க்கையில் நடந்து விட்டால் அவருடைய வாழ்க்கையை திருப்பி போடும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. பொறுப்புகள் நிறைந்த ஒரு முழு மனிதனாக மாற்றக்கூடிய அற்புத சக்தி வாய்ந்த நிகழ்வாக தான் திருமணம் இருக்கிறது. அப்படிப்பட்ட திருமணம் சரியான வயதில் நடைபெற்றால் தான் அதற்கு சிறப்பு. ஆனால் சிலருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு முறை முருகன் கோவிலுக்கு சென்று எப்படி வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நம் முன்னோர்கள் காலத்தில் 13, 14 வயதிலேயே திருமணத்தை செய்து வைத்து தங்கள் கடமை முடிந்து விட்டது என்று பெற்றோர்கள் நிம்மதி அடைவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படிப்பு, வேலை, சமூகத்தில் நல்ல அந்தஸ்து இவை அனைத்தும் பெற்ற பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று திருமணத்தை தள்ளிப்போடும் இளம் வயதினர், தங்களின் திருமண வயதை கடந்த பிறகு தங்களுக்குரிய துணை கிடைக்காமல் வருத்தப்படும் நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.

- Advertisement -

இவர்களுடைய வருத்தத்தை நீக்குவதற்கு உதவி புரியும் தெய்வமாக திகழக்கூடியவர்தான் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான். முருகப்பெருமானை நாம் முறையாக வணங்கினோம் என்றால் நம்முடைய வேண்டுதல் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார். திருமண தடையை விளக்குவதற்கு அவரை எப்படி வழிபட வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

செவ்வாய்க்கிழமை அன்று இரவு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு திருமண தடை உள்ள நபர் தனியாக செல்ல வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் அவர்களுடைய பெற்றோர்கள் போகலாம். வேறு யாரும் போகக்கூடாது. அந்த கோவிலில் வட மேற்கு மூலையில் இரவு தங்க வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி அவரை வழிபட வேண்டும். முருகனின் திருமணத்திற்கு உதவி புரிந்தவரான விநாயகர் பெருமான் வேண்டுபவர்களின் திருமணத்தை விரைவில் நடத்தி வைப்பார். அடுத்ததாக தம்பதி சமேதமாக இருக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கி கொடுத்து அவருக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று அர்ச்சனை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் நடந்த பிறகு தங்கள் துணையுடன் அதே முருகன் கோவிலுக்கு சென்று அதே மூலையில் இருவரும் இரவு தங்கி அதேபோல் அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட்டு வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: குபேரருக்கு இப்படி அர்ச்சனை செய்து வழிபட்டால் குபேர சம்பத்துகள் அனைத்தும் பெற்று நம் வீட்டில் செல்வ கடாட்சம் நிரம்பி இருக்கும்.

இவ்வாறு முழு நம்பிக்கையுடன் நாம் முருகனை வேண்டி வந்தால் நம்முடைய இல்லத்தில் கெட்டிமேள சத்தம் விரைவில் கேட்கும் என்பது உறுதி.

- Advertisement -