பெண்கள் திருமாங்கல்யத்தை இப்படி கட்டிக் கொண்டால், வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்பதே வராது. திருமாங்கல்ய விஷயத்தில் நிறைய பெண்கள் செய்யும் ஒரு தவறு!

mangalyam-kungumam
- Advertisement -

அவரவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, அந்தந்த சமயங்களில் சரியாக கொடுத்தாலே போதும். வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது குறைந்துவிடும். கணவன் மனைவிக்கும் இது பொருந்தும். கணவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மனைவி சரியான இடத்தில் கொடுப்பது கிடையாது. மனைவிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை, கணவர் சரியான இடத்தில் கொடுப்பது கிடையாது. அதாவது கணவன் மனைவி மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் போது அவர்களுக்குள் பேசிக் கொண்டு சண்டை போட்டுக் கொள்வது என்பது வேறு. வீட்டில் கணவன் மனைவி தவிர மற்ற உறவுகள் இருக்கும்போது அவர்கள் பேசிக் கொள்வது என்பது வேறு.

fight4

கணவன் மனைவி தவிர மூன்றாவது நபர் வீட்டில் இருந்தால் கணவன், மனைவிக்கு கொடுக்கக்கூடிய மரியாதையில் குறை வைக்கக்கூடாது. மனைவி, கணவனுக்கு கொடுக்கக்கூடிய மரியாதையில் குறை வைக்கக்கூடாது. இதை சரி செய்து கொண்டாலே போதும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவது குறைந்துவிடும். சரி, இது தவிர ஒரு பெண் தன்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் திருமாங்கல்யத்தை எப்படி பராமரித்து வந்தால் இல்லறம் இனிமையாக அமையும் என்பதை பற்றியும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சில பேர் தாலி கட்டும்போது நெஞ்சு குழி நடுவே வைத்துத் தாலி கட்டுவார்கள். சிலபேர் நெஞ்சுக்கு கீழே, அதாவது தொப்புளுக்கு கொஞ்சம் மேல் பக்கம், தொங்கத் தொங்க தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள். இதில் தாலி கட்டும்போது எப்படி அந்த தாலியை கழுத்தில் கட்டிக் கொண்டாலும் சரி, திருமணம் முடிந்து தாலியை பிரித்து கோர்க்கும் போது, பெண்களுடைய கழுத்தில் தாலி கொடி என்பது சரியாக நெஞ்சு குழி நடுவே தான் அமைந்திருக்க வேண்டும்.

mangalyam

தாலியில் இருக்கும் தங்கம் பெண்களின் நெஞ்சுக்குழியை உரசிக்கொண்டு இருப்பது ஆரோக்கிய ரீதியாக பல நன்மைகளை கொடுக்கின்றது. ஆன்மீக ரீதியாக, கணவன் கட்டிய தாலி மனைவியின் நெஞ்சுக்குழியில் இருக்கும் பட்சத்தில், அந்த கணவனையும் அந்த கணவனுடைய குடும்பத்தையும் எப்போதும் அவள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், என்பதற்காகத்தான் தாலிக்கொடி பெண்களின் நெஞ்சு குழிக்கு நேராக கட்டுப்படுவதாக நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆக பெண்கள் தாலியை நெஞ்சு கூழிக்கு மேல் பக்கத்திலும் இல்லாமல், நெஞ்சு குழிக்கு கீழ் பக்கத்திலும் இல்லாமல் சரியாக நெஞ்சு குழி நடுவே கட்டிக்கொள்வது நன்மை என்று சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் தாலி கொடியை நீங்கள் மஞ்சள் கயிற்றில் அணிந்து இருந்தால் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டுமாவது அந்த மஞ்சள் கயிறுக்கு, மஞ்சள் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது.

mangalyam1

இறுதியாக ஒரு விஷயம். இன்றைய சூழ்நிலையில் இந்த தவறை பெரும்பாலும் நிறைய பெண்கள் செய்கிறார்கள். அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் திருமாங்கல்யத்தை யாரிடமும் வெளியே காண்பிக்க மாட்டார்கள். எப்போதும் புடவைக்கு உள்பக்கம் தான் திருமாங்கல்யத்தை மறைத்து வைத்திருப்பார்கள். கோவிலில் திருமங்கலத்திற்கு பொட்டு இட்டு கொள்வதாக இருந்தாலும் கூட யாருக்கும் தெரியாமல் மறைத்து தான் குங்கும பொட்டை மாங்கல்யத்ற்க்கு வைப்பார்கள்.

mangalyam

இன்றைய சூழ்நிலையில் நிறைய பெண்கள் திருமாங்கல்யத்தை எல்லோர் கண்களுக்கும் தெரியும்படி கழுத்தில் அணியும் ஆபரணங்கள் போல் வெளியே தொங்கவிடும் தவறை செய்கிறார்கள். உங்களுடைய திருமாங்கல்யத்தை அனாவசியமாக அடுத்தவர்கள் பார்க்கும்படி வெளிப்பக்கமாக போடக்கூடாது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் பட்சத்தில் இந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய இல்லறம் இனிமையாக அமையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -