நாளை மறுநாள் திருப்பதி சென்றால் எத்தனை புண்ணியம் உண்டு தெரியுமா ?

thirupathi perumal
- Advertisement -

மாதங்களில் புனிதம் நிறைந்தது “புரட்டாசி” மாதம் ஆகும். இம்மாதம் திருமாலின் வழிபாட்டிற்குரிய மாதமாகும் அதுவும் கலியுக கடவுளான திருப்பதி திருமலை வேங்கடாசலபதியின் தரிசனம் பெற மக்கள் அதிகளவு அக்கோவிலுக்கு செல்லும் ஒரு மாதமாகும். புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் பிரம்மோற்சவம் விழா உலகளவில் புகழ் பெற்றதாகும். இந்த வருடம் இந்த விழா நாளை மறுநாள்(17.9.2018) தொடங்கவிருக்கிறது. இந்த விழாவில் கருட சேவை நிகழ்வை குறித்த சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிரம்ம தேவனே முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதால் இது பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் இந்த திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தில் திருமலையின் நாயகனான ஸ்ரீநிவாசன் ஒவ்வொரு நாளும் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த பத்து நாள் உற்சவத்தில் ஐந்தாம் நாள் இரவில் நாராயணனாகிய “திருமலையாண்டவர்” தனது அனுக்க தொண்டனும், “பெரிய திருவடியும்”ஆகிய “கருட வாகனத்தில்” எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தருவது தான் மிகவும் விஷேஷ நிகழ்வாகும்.

- Advertisement -

விஷ்ணு புராண கதையின் படி கஜேந்திரன் எனும் யானை ஆற்றில் நீர் அருந்த சென்ற போது ஒரு மிகப்பெரும் முதலை, கஜேந்திரன் என்னும் யானையை பிடித்துக்கொண்டு ஆற்று நீருக்குள் இழுக்க ஆரம்பித்தது. யானை பல வகையில் முயன்றும் முதலையின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. தான் மிகுந்த ஆபத்தில் இருப்பதை உணர்ந்த கஜேந்திரன் காக்கும் கடவுளான ஸ்ரீமன் நாராயணனை தன்னை காப்பாற்றுமாறு அழைத்தது. அந்த யானையின் கூக்குரலுக்கு உடனே தனது தொண்டனான கருடனின் மேல் அமர்ந்து யானையின் முன்பு தோன்றிய நாராயணன் தனது “சக்ராயுதத்தால்” முதலையை கொன்று, முன்வினை பாவ செயல்களால் யானையாக பிறந்த “இந்தரத்யும்னனுக்கும்” , முதலையாக பிறந்த கந்தர்வ மன்னனுக்கும் மோட்சத்தை அளித்தார்.

Garudan God

இந்த கஜேந்திரன் எனும் யானையை போலவே வாழ்க்கையின் பல இன்னல்களில் சிக்கி தவிக்கும் திருமாலின் அடியவர்கள் “கோவிந்தா, நாராயணா” என்று எப்பெயரிட்டு அழைத்தாலும் அவர்களுக்கு ஓடோடி வந்து உதவுபவர் தான் திருமலையில் வெங்கடாசலபதியாக அருள்புரிந்து மகாவிஷ்ணு. கருட சேவை அன்று பெரிய திருவடியான கருடாழ்வாரையும், திருமலை ஸ்ரீனிவாசனையும் தரிசிப்பவர்களின் வாழ்வில் பல இன்பங்கள் ஏற்பட தொடங்கும். இந்த உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நன்மைகள் அனைத்தையும் வழங்கி இறுதியில் மோட்ச பிராப்தியை அளிப்பார் ஸ்ரீ நாராயணன்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பிள்ளையார்பட்டி கோவில் பற்றிய முழு தகவல்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Tirupathi garuda sevai 2018 date and its benefits in Tamil.

- Advertisement -